விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சுற்றும் குழல்தாழ*  சுரிகை அணைத்து,* 
    மற்று பல*  மாமணி பொன்கொடுஅணிந்து,*
    முற்றம் புகுந்து*  முறுவல்செய்து நின்றீர்,*
    எற்றுக்கு இதுஎன்?*  இதுஎன்? இதுஎன்னோ!  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

குழல் - திருக்குழல்களானவை
சுற்றும் - பிடரியைச்சுற்றிலும்
தாழ - தாழ்ந்தலையப்பெற்றும்
சுரிகை - உடைவாளை
அணைத்து - தரித்துக்கொண்டும்

விளக்க உரை

இரண்டாம்பாட்டில் “கவராகமுடித்து“ என்றபடியே மயிர் முடித்து வந்த்தில் ஈடுபடக் காணாமையாலு “களிவண்டெங்குங் கலந்தாற்போல் கமழ் பூங்குழல்கள் தடந்தோள்மேல், மிளிரநின்று விளையாட“ என்றாற்போலே குழல்களைத் தோள்களிலே தாழவிட்டான், அதைக்கண்டு சொல்லுகிறாள் “சுற்றுங் குழல்தாழ“ என்று. (சுரிகையணைத்து) இடுப்பிலே (அழகுக் குடுலாகச்) சொருகும் கத்திக்குச் சுரிகை யென்று பெயர். வடசொல் விகாரம், அதை யணிந்துகொண்டு வந்தானாயிற்று. இங்கே வியாக்கியான வாக்கியங் காண்மின் “(சுரிகையணைத்து) உகப்பார்க்கும் உகவாதார்க்கும் கருவி ஒன்றாயிற்று, சத்ருக்களை இருதுண்டமாக விட்டுமுடிக்கும், அநுகூலரை அழகாலே கொல்லும்.“ (மற்றும் பல இத்யாதி) பலவகைப்பட்ட ரத்நபூஷணங்களையும் பொன்னாபரணங்களையும் சாத்திக்கொண்டு வந்தீர், காலங் கடந்து வந்தீராகையாலேஉள்ளே வரமாட்டாமையாலே முற்றத்தளவிலே நின்று புன்முறுவல் செய்து பார்ப்போம், இவள் அநுராகம் தோற்ற இருந்தாளாளகில் உள்ளே புகுவோம், ரோஷந்தோற்ற இருந்தாளகில் சற்று நிதானிப்போம்“ என்று கருதிப் புன்முறுவல் செய்து நிற்கிறீர்? எதுக்கு இவ்வளவு ப்ரயாஸப் படுகிறீர்? உம்முடையள திருவுள்ளத்துக்குப் பொருந்தினாரை விட்டிட்டு இங்கே வந்து ஏதுக்கு இத்தனை வருத்தப்படுகிறீர்?

English Translation

With curls of hair falling over your face, bracing a sword and wearing many gold-ornaments, you enter the inner court and stand there smilling,-O what is this, what is this, what is this?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்