விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நாமம் பலவும் உடை*  நாரண நம்பீ,* 
    தாமத் துளவம்*  மிக நாறிடுகின்றீர்,*
    காமன்எனப்பாடி வந்து*  இல்லம் புகுந்தீர்,* 
    ஏமத்து இதுஎன்?*  இதுஎன்? இதுஎன்னோ!  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நாமம் பலவும் உடை - பல பல திருநாமங்களையுடைய
நாரண நம்பி - ஸ்ரீமந்நாராயணமூர்த்தியே!
மிக நாறு - மிகவுமு பரிமளித்துக்கொண்டிருக்கிற
துளபம் தாமம் - திருத்துழாய்மாலையை
இடுகின்றீர் - அணிந்துகொண்டிருப்பவரே!

விளக்க உரை

“நாமம் பலவுமுடை“ என்பதற்கு * விச்வம் விஷ்ணுர் வஷட்கார, என்று தொடங்கி ஓதப்படுகிற ஸஹஸ்ர நாமங்களை யுடையவர் என்பதாக இங்குப் பொருளன்று, இங்குப் பெரியவாச்சான்பிள்ளை யருளிச்செய்வது காண்மின், - “இன்னாளுக்கு அடியான் இன்னாளுக்கு அடியான் என்று நீர் படைத்த பேர்களுக்கு எல்லையுண்டோ? சொல்ல வேணுமோ? நீர் ஊர்ப் பொதுவல்லீரோ? நீர் நிரபேக்ஷரல்லீரோ? என்று. தாமத்துளபம் மிகநாறிடுகின்றீர் - விரஹதாபம் பொறுக்கமாட்டாமல் நீர் இங்கு ஸம்ச்லேஷிக்க வருகிறீராகில் விரஹாக்நியாலே துளபமாலை கருகிப் போயிருக்கவேணுமே? இப்படி பரிமளிக்க ப்ரஸக்தியுண்டோ? என்பதாகக் கருத்துக் காண்க. ஏமத்து இதுவென்? - ஏமம் என்று இரவுக்கும் பெயர், காவலுக்கும் பெயர், இரண்டு பொருளும் இங்குக் கொள்ளத் தகுவனவே. கட்டுங் காவலுமான இடத்திலே எதுக்கு வந்து சேர்ந்தீர், இரவிலே நீர்தேடிப் போகவேண்டிய இடம் வேறாயிருக்க இங்கு எதுக்கு வந்தீர்?

English Translation

O Garuda-banner-holder! O Deft rider! In your sleep you stretched a foot and smote a cart! In the dead of the night, you came singing love songs and enter this house. O, what is this, what is this, what is this?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்