விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    காதில் கடிப்புஇட்டு*  கலிங்கம் உடுத்து,* 
    தாதுநல்ல*  தண்அம் துழாய் கொடுஅணிந்து,*
    போது மறுத்து*  புறமே வந்து நின்றீர்,*
    ஏதுக்கு இதுஎன்?*  இதுஎன்? இதுஎன்னோ!  (2)   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தாது நல்ல த ண் அம் துழாய் - தாதுகளையுடைத்தாய நல்ல குளிர்ந்த அழகிய திருத்துழாய்மாலையை
அணிந்து கொடு - அணிந்து கொண்டும்
போது மறித்து வந்து - காலதாமதமாக வந்து
புறமே - கதவின் புறமாக
எதுக்கு நின்றீர் - ஏன் நிற்கின்றீர்

விளக்க உரை

“வானம்வாய்ந்த வளமலைக்கவா அற் காணமஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய“ என்ற விடத்திற்கு நச்சினார்க்கினியர் உரையிடுமிடத்து, (கலிங்கம் நல்கிய) “போர்வையைக் கொடுத்து“ என்றுரைத்தனராதலால் இங்குக் கலிங்கமென்றதற்குப் போர்வை யென்று பொருள் கொள்ளலாம். பிறர்க்குத் தெரியாமலிருத்தற் பொருட்டுப் போர்வை போர்த்துக்கொண்டு வந்தனன் போலும். கலிங்கமாவது கறுப்புத் திருப்பஜீவட்ட மென்பர் ஒரு அரும்பதவுரைகாரர். மேற்பாட்டில் துவராடையுடுத்து என்ற விடத்திற்கு வியாக்கியான மருளா நின்ற பெரியவாச்சான்பிள்ளை “முற்பட உடுத்ததுக்கு ஈடுபடாமையாலே அதுக்குமேலே ஒரு சிவப்பு நிறப்புடவையைச் சிமிழ்த்துக் கொண்டு வந்தானாயிற்று“ என்றருளிச் செய்திருக்கக் காண்கையாலே இங்குக் கலிங்க மென்றது கறுப்பு வஸ்திரத்தை யென்னலாம். தாதுல்ல தண்ணந்துழாய்கொடு அணிந்து) பரிமளத்தையுமு செவ்வியையும் குளிர்த்தியையு முடைத்தான திருந்துழாய் மாலையிலு. அனைவரும் ஈடுபடக் கண்டவனாகையாலே அதனை அணிந்துகொண்டு வந்தானாயிற்று. ப்ரணய ரோஷம் நீங்கிக் கடுக அணைத்துக்கொள்வளென்னும் விருப்பத்தாலே இங்ஙனே சில அலங்காரங்களைச் செய்துகொண்டு வந்தானாயிற்று. இவன்றான் காலதாமதஞ் செய்து வந்தானாகைபாலே “ஒரு பகலாயிர மூழியாலோ“ என்று சொல்லும்படியாக விருக்கிற அவ்வாய்ச்சி ஆதரித்து முகங்கொடுத்து வார்த்தை சொல்லமாட்டிற்றிலள், அதுவே ஹேதுவாக இவனும் விரைந்து செல்ல மாட்டாதே கதின் புறமே கவிழ்தலையிட்டு நிற்கவேண்டியவனாயினன், அந்த நிலைமையைக் கண்டு ஆய்ச்சி “போது மறித்துப் ப்புறமே வந்து நின்றீர் எதுக்கிதுவென் இதுவேல் இதுவென்னோ. “காதில் கடிப்பு இட்டுக்கொண்டு வரவேண்டுமகையாலும் அரையில் கலிங்க வரவேண்டுகையாலும் நல்ல தண்ணந்துழாய் அணிந்துகொண்டு கையாலும் இவற்க்காகத் தாமதமாயிற்றேயன்றி உன்னை யொழிய வேறொருத்யிடத்தை போயிருந்துனாய்த் தாமதித்து வந்தேனல்லேன்” என்று கண்ணபிரான் ஸூசிப்பிக்க, இதுவென்? இதுவென்? இதுவென்? என்கிறாள், அதாவது (இது வென்?) வெறுங்காதே பரம போக்யமாயிருக்க காதிலே கடிப்பிடுவானேன்? (இதுவென்?) பூணித்தொழுவினிற்புக்குப் புழுதியளைந்த பொன்மேனியைக் காணப்பெரிது முகப்பார். நாங்களாயிருக்கக் கலிங்க முடுத்து அத்திருமேனி யழகை மறைப்பானேன்? (இது வென்? திருமேனிதானே ப்ரிமள ப்ரசுர மாயிருக்கத் திருத்துழாய்ப் பரிமளம் ஏறிடுவானேன்? இருந்தபடியே உகக்கிற எங்களுக்காக அலங்கரித்து வரவேணுமோ? என்கை. (எதுக்கிது?) கொடும் பசிவேளையிற் கிடையாத சோறு எதுக்கு? உம்மழகை நீரே கண்டு கொண்டு உம்முடம்பையும் நீரே தொட்டுக்கொண்டு நீரே மோந்து கொண்டு நீரே கட்டிக் கொண்டு நீரே மகிழ்ந்திரும், எங்களுக்கேதுக்கு? வேண்டா வேண்டா என்று கதவடைக்கின்றான்.

English Translation

Wearing beautiful earnings, a black shirt, and a cool fragrant Tulasi garland over your crown. You come through the back door of this late hour! O, what is this, what is this, what is this?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்