விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தம்பரம் அல்லன ஆண்மைகளைத்*  தனியேநின்று தாம் செய்வரோ?,
    எம்பெருமான் உன்னைப் பெற்ற வயிறுஉடையேன்*  இனி யான்என் செய்கேன்?,*
    அம்பரம் ஏழும் அதிரும் இடிகுரல்*  அங்குஅனல் செங்கண்உடை,*
    வம்புஅவிழ் கானத்து மால்விடையோடு*  பிணங்கி நீ வந்தாய் போலும்!   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வம்பு அவிழ்கானத்து அங்கு - பரிமளம் வீசுகின்ற அச்சோலையிடத்திலே
அம்பரம் ஏழும் அதிரும் இடி குரல் - மேலுலகங்களெல்லாம் அதிரும்படியான கனத்த குரலையும்
அனல் செம் கண் உடை - நெருப்புப்போலே சிவந்த கண்களையு முடையனவான
மால் விடையோடு - கரிய எருதுகளோடே
நீ பிணங்கி வந்தாய் போலும் - நீ போர் செய்து வந்தாயாமே

விளக்க உரை

கண்ணனுடைய தீம்புகளைச்சொல்லி முறையிடுகினற ஆய்ச்சிகளை ஒருவாறு த்ருப்தி செய்விக்க முன்னடிகள் அமைந்தன. உன்னுடைய பருவத்துக்கும் சக்திக்கும் ஈடல்லாத காரியத்தை நீ செய்வதே பிசகு, அதிலும் பலராமனோடு கூடவிருந்து செய்தாலாவது கண்ணெச்சில் படாதிருக்கும், அஸஹாயனாய் நின்று செய்யத் தகுமோ? இனிச் சொல்லி என்? இப்படிப்பட்ட உன்னை இந்த வயிற்றில் சுமந்து பெற்றவிட்டேன், இனி நான் என்ன செய்யக்கூடுமென்கிறான்.

English Translation

O My sweet Lord! What is beyond person;s ability must be done others help. why should you do it alone? Alas, I bore you in my womb, now what can I do? The dark bulls with red eyes and fiery shorts send bellows that shake the seven worlds! It looks like you went into the fragrant grove and fought with them victoriously!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்