விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இந்திரனோடு பிரமன்*   ஈசன் இமையவர் எல்லாம்* 
    மந்திர மா மலர் கொண்டு*  மறைந்து உவராய் வந்து நின்றார்*
    சந்திரன் மாளிகை சேரும்*  சதுரர்கள் வெள்ளறை நின்றாய்* 
    அந்தியம் போது இது ஆகும்*  அழகனே!  காப்பிட வாராய்  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சந்திரன் - சந்த்ரனானவன்
மாளிகை சேரும் - வீடுகளின் மேல்நிலையிலே சேரப்பெற்ற
சதுரர்கள் வெள்ளறை - ஸமர்த்தர்கள் வஸிக்கின்ற திருவெள்ளறையிலே
நின்றாய் - நின்றவனே!
அழகனே - அழகு உடையவனே!

விளக்க உரை

சந்திர மண்டலத்தளவும் ஓங்கியிருக்கின்ற மாளிகைகள் நிறையப்பெற்றதும் மங்களாசாஸநம் செய்ய வல்லவர் மலிந்திருக்கப்பெற்றதுமான திருவெள்ளறையில் எழுந்தருளியிருப்பவனே!, எல்லாத் தேவரும் உன்னை ஸேவிக்கும்படி மந்த்ரபுஷ்பங் கொண்டுவந்து மறைந்துநிற்கிறார்கள், பொழுதும் ஸந்தியா காலமாயிற்று. உனது அழகுக்கு ஒரு குறை வாராதபடி நான் திருவந்திக்காப்பிட வரவேணுமென்பதாம். பகவத் ஸ்தோத்ரமாகிய வேதமந்திரங்களைச் சொல்லிக்கொண்டு பகவானுக்கு ஸமர்ப்பிப்பதற்காகக் கையிலேந்தியுள்ள மலர் மந்திரமலர் எனப்பட்டது. காப்பு = ரக்ஷை.

English Translation

O Beautiful Lord’ Indra, Brahma, Siva, and all the gods in heaven have brought sanctified flowers for worship and stand betwixt, hidden. O Lord living amid men of learning in Vellarai where mansions touch the Moon! It is eventide, come, let me ward off the evil eye.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்