விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அச்சம் தினைத்தனை இல்லை இப்பிள்ளைக்கு*  ஆண்மையும் சேவகமும்,* 
    உச்சியில் முத்தி வளர்த்துஎடுத்தேனுக்க*  உரைத்திலன் தான்இன்று போய்,*
    பச்சிலைப் பூங்கடம்பு ஏறி*  விசைகொண்டு  பாய்ந்து புக்கு*  ஆயிரவாய்-
    நச்சுஅழல் பொய்கையில் நாகத்தினோடு*  பிணங்கி நீ வந்தாய் போலும்!   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆண்மையும் சேவகமும் - சௌர்யமும் வீர்யமுமே யுள்ளது
உச்சியில் முத்தி - உச்சிமோந்து
வளர்ந்து எடுத்தேனுக்கு - வளர்த்தெடுத்தாயாகிய எனக்கும்
தான் உரைத்திலன் - தான் சொல்லாதவனாய்
இன்று போய் - இன்று வெளியிற்போய்

விளக்க உரை

பச்சிலைப் பூங்கடம்பேறி - ஸ்ரீவிஷ்ணுபுராணத்தில் காளியன் கிடந்த பொய்கையைப் பற்றிச் சொல்லுமிடத்து (5-7-4) விஷாக்நிநா ப்ரஸரதா தக்கதீரமஹீருஹம்“ என்றபடியே அக்கடப்பமரம் காளியனுடைய விஷாக்கியினால் கொளுத்தப்பட்டு இலை பூ காய் கனி முதலிய யொன்றுமின்றி மொட்டை மரமாக இருந்தாலும் கண்ணபிரான் அதன் மேலேறும்போது அவனுடைய திருவடி ஸம்பந்தமுண்டான மாத்திரத்தினால், * பச்சிலைப் பூங்கடம்பாயிற்று என்று ஆசாரியர்கள் நிர்வஹிக்கும்படி பசுமை இலை, பச்சிலை. (ஆயிரவாய் நாகத்தினோடு) காளியனைச் சில விடங்களில் ஐந்தலை நாகமென்று சொல்லியிருக்க ஆயிரவாய் நாகமென்றதென்? எனில், பயங்கரத்வம் தோற்றதற்காகவா மத்தனை. தினைத்தனை -தினையென்பது மிகச்சிறய தானியம், அதிக அற்பமான அளவுக்கு அதனை உவமை கூறுவர்கள் கவிகள், கிஞ்சித்தும் என்றபடி “தினையாஞசிறிதளவும்“ என்ற பெரிய திருவந்தாதியுங் காண்க.

English Translation

This child doesn;t have a wee bit of fear in him, only bold wrecklessness. I bring him up fondly, smelling his scalp. It looks like today you climbed up a Kadamba free, dived into the lakey and wrestled with the poison-spitting thousand-hooded snake!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்