விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அங்ஙனம் தீமைகள் செய்வர்களோ நம்பீ!*  ஆயர் மடமக்களை,*
    பங்கய நீர்குடைந்துஆடுகின்றார்கள்*  பின்னே சென்றுஒளித்திருந்து,*
    அங்கு அவர் பூந்துகில் வாரிக்கொண்டிட்டு*  அரவுஏர்இடையார் இரப்ப,* 
    மங்கை நல்லீர் வந்து கொள்மின் என்ற*  மரம் ஏறி இருந்தாய் போலும் 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தீமைகள் செய்வர்களோ - தீம்புகள் செய்யத் தகுமோ?
பங்கயம் நீர் - தாமரைப்பொய்கையிலே
குடைந்து - அவகாஹித்து
ஆடுகின்றார்கள் பின்னே சென்று - நீராடப்போனவர்களின் பின்னேபோய்
ஒளித்து இருந்து - மறைந்து கொண்டிருந்து

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் கண்ணபிரானைப் பொடிவதற்குச் சிறிது தொடங்கின யசோதை இது முதலாக மூன்று பாசுரங்களிலே தான் கேள்விப்பட்டிருந்த சில சேஷ்டிதங்களை யெடுத்துரைத்து இப்படியும் தீமை செய்யலாமோ வென்கிறாள்.

English Translation

O Lord! How could you do such things to innoent cowherd girls? You followed them to the lotus tank, hid and made off with their clothes while they bathed, climbed up a tree and said, "Girls, come up and take your clothes!" -while the thin waisted girls stood in the water pleading

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்