விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அஞ்சுவன் சொல்லி அழைத்திட நங்கைகாள்!*  ஆயிரம் நாழி நெய்யை,*
    பஞ்சிய மெல்அடிப் பிள்ளைகள் உண்கின்று*  பாகம்தான் வையார்களே,*
    கஞ்சன் கடியன் கறவுஎட்டு நாளில்*  என்கை வலத்துஆதும் இல்லை,* 
    நெஞ்சத்துஇருப்பன செய்து வைத்தாய் நம்பீ!*  என்செய்கேன் என்செய்கேனோ!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பாகம் தான் வையார்களே - ஸ்வல்பபாகமும் மிகுத்தி வைத்தார்களில்லை,
கஞ்சன் - கம்ஸனானவன்
கறவு - (அவனுக்குச் செலுத்தவேண்டிய) கப்பமோவென்றால்
எட்டு நாளில் - இன்னமும் எட்டுநாளைக்குள் செலுத்தவேண்டிய தாகவுள்ளது.
என் கைவலத்து - என்கையில்

விளக்க உரை

கீழ் இரண்டு பாட்டிலும் ‘இப்பிள்ளையைப் பேசுவதஞ்சுவனே’ என்றும் ‘உரப்புவதஞ்சுவனே’ என்றும் சொன்ன யசோதைப் பிராட்டியை நோக்கி ஆய்ச்சிகளெல்லாரும் ‘நங்காய்! தாய்க்கு அடங்காதவன் ஊர்க்கு அடங்கான் என்னும் பழமொழி உனக்குத் தெரியாததன்று, நீயே இப்படி கைவிட்டால் இனி நாங்கள் வாழும் வகையுண்டோ? எங்கள் நெய் பால் தயிர் முதலானவற்றை யெல்லாம் பறிகொடுப்பதேயோ எங்கள் தலைவிதி?; என்று கண்ணுங் கண்ணீருமாய்ச் சொல்ல, அவர்களுக்கும் மறுமாற்றஞ் சொல்லிக் கண்ணபிரானையுமு் லகுவாகப் பொடிகின்றாள் யசோதை. ஊர்ப்பிள்ளைகள் நெய்பால் முதலியவற்றை யுண்பதற்கு உள்ளே புகும்போது, பூனைபோல் ஓசைபடாமல் மெத்தெனப் புகும்படியைத் தெஜீவிப்பதாம் பஞ்சிய மெல்லடிப் பிள்ளைகள் என்பது. (உண்சின்று) திருவாய்மொழியில் (10-2-5) “அமரர்கோன் அர்ச்சிக்கின்று“ என்ற பிரயோகத்தை யொத்த தாமிது. மூன்றாமடியில் கறவு என்றது, கர, என்னும் வட சொல்லடியான தமிழ்ச்சொல் என்னலாம், கப்பம் என்று பொருள். கம்ஸனுடைய ராஜதானியாகிய வடமதுரையைச் சார்ந்த விடங்களில் வாழ்பவர்கள் வருஷத்துக் கொருமுறை கம்ஸனுக்குக் கப்பங்கட்டுவது வழங்க மென்பது ஸ்ரீவிஷ்ணுபுராணத்திலும் (5-5-2) முதலிய இடங்களிற் காணத்தக்கன.

English Translation

O Ladies, I fear to speak of this, O Lard! Your soft-footed friends have not left even half of the thousand pots of Ghee I had saved. Alas, Kamsa is cruel. I have to pay my taxes to him within a week, I have no savings. Your acts have broken my heart. Alas, what shall I do, what shall I do?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்