விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  செண்பக மல்லிகையோடு* செங்கழுநீர் இருவாட்சி* 
  எண் பகர் பூவும் கொணர்ந்தேன்*  இன்று இவை சூட்ட வா என்று* 
  மண் பகர் கொண்டானை*  ஆய்ச்சி மகிழ்ந்து உரை செய்த இம் மாலை* 
  பண் பகர் வில்லிபுத்தூர்க் கோன்*  பட்டர்பிரான் சொன்ன பத்தே. (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

செண்பகம் - செண்பகப்பூவும்
மல்லிகையோடு - மல்லிகைப்பூவும்
செங்கழுநீர் - செங்கழுநீர்ப்பூவும்
இருவாட்சி - இருவாட்சிப்பூவும்
பகர் மண் கொண்டானை - பகர்ந்த மண்ணைக் கொண்டவனை

 

விளக்க உரை

இந்தத் திருமொழிக்குப் பலஞ்சொல்லாதொழிந்தது, இப்பத்துப் பாசுரங்களும் ஸ்வயமே ரஸ்யமாய் போக்யமாயிருக்குமென்பதற்கு. பத்தே - ஏகாரம் - இப்படியும் பாடவிருக்கப் பெறுவதே! என்று இத்திருமொழியின் போக்யதையைக் கொண்டாடியதைக் காட்டும். எண்பகர் - சூட்டிக்கொள்ளலாமென்று சாஸ்த்ரங்களில் எண்ணப்பட்ட என்றுமாம். கொணர்ந்தேன் = ‘கொணா, என்ற பகுதி குறுக்கலும் விரித்தலுமாகிற விகாரங்களைப்பெற்று ‘கொணர், என நின்றது. பகர்மண் - வாமநனாய்ச்சென்ற திருமால் ‘எனக்கு ­வடி மண் தா, என்று சொல்லப்பெற்ற பூமியை என்றாவது, ‘­வடிமண் அளந்துகொள், என்று மஹாபலி உடன்பட்டுச் சொன்ன பூமியை என்றாவது கொள்க. ஆரேனும் ஒன்றைச் சொல்லிலும் ராகத்திலே சேரும்படி சொல்லுகின்ற ஸ்ரீவில்லிபுத்தூரென்பது ‘பண்பகர் வில்லிபுத்தூர், என்பதன் கருத்து. உரைசெய்த - பலவின்பால் இறந்தகால வினையாலணையும்பெயர்; இரண்டாம் வேற்றுமைத்தொகை. உரை செய்தவற்றைப் பட்டர்பிரான் சொன்ன இம்மாலையென்க. அடிவரவு - ஆநிரை கரு மச்சு தெரு புள் எருது குடம் சீமாலிகன் அண்டம் செண்பகம் இந்திரன்.

English Translation

This decad of sweet song by Srivilliputtur’s King Pattarbiran sings of Yasoda’s call to the Lord of the Universe to come and wear Senpakam, Mallikai, Senkaunir, Iruvatchi and a host of other flowers. Set in Panns, this too is a garland fit for the Lord.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்