விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    காலை எழுந்து கடைந்த இம்மோர்விற்கப் போகின்றேன்*  கண்டே போனேன்,* 
    மாலை நறுங்குஞ்சி நந்தன் மகன்அல்லால்*  மற்று வந்தாரும் இல்லை,*
    மேலை அகத்து நங்காய்! வந்து காண்மின்கள்*  வெண்ணெயேஅன்று, இருந்த*
    பாலும் பதின்குடம் கண்டிலேன்*  பாவியேன் என்செய்கேன் என்செய்கேனோ!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

காலை எழுந் - விடியற்காலத்திலெழுந்து
கடைந்த - (வருந்திக்) கடைந்த
இ மோர் - இந்த மோரை
விற்க - விற்பனை செய்ய
போகின்றேன் - (தெருவேறப்) போகா நின்றநான்

விளக்க உரை

ஓர் இடைச்சி கண்ணபிரானுடைய வெண்ணெய் பால் களவுகளைச் சொல்லி முறையிடும் பாசுரம் இது. “வெண்ணிறத் தோய்தயிர்தன்னை வெள்வரைப்பின் முன்னெழுந்து கண்ணுறங்காதே யிருந்து கடைய“ என்கிறபடியே ப்ராஹ்ம முஹூர்த்தத்தில் யெழுந்து கடைந்த மோரை விற்பதற்காகத் தலையிற் சுமந்து புறப்பட்டு நான் போகாநிற்கச் செய்தே நடுவழியிலே உன் மகன் கண்ணன் எதிர்படக் கண்டு அப்போதே திடுக்கிட்டுப் போனேன், வீட்டில் புகுந்து என்ன அநர்த்தம் செய்யப்போகிறானோ! என்று சிந்தித்துக் கொண்டே, போகவேண்டியது தவிர வொண்ணாமையினாலே போனேன், இப்போது வந்து பார்த்தால் வெண்ணெயும் காணோம், பத்துக் குடங்களில் நிரப்பி வைத்திருந்த பாலையுங் காணோம். விசாரிதத்தில், நந்தகிசோரன் தவிர வேறொருவரும் இங்குப் புகுந்ததாகத் தெரியவில்லை, அவன் இங்கே பண்ணிவிட்டுப் போயிருக்கிற சேஷ்டைகளைப் கண்படைத்தவர்காள்! வந்து காணுங்கோள், இங்ஙனே நான் முறையிட்டுப் பயனென்ன? தண்டிக்கக் கடமைப்பட்டவர்களே ஆணாட விட்டிட்டிருக்கும்போது பாவியேன் என்செய்வேன்! என்று தன்னில்தான் வெறுத்துரைத்துக் கொள்ளுகிற ளொருத்தி. முதலடியில் போகின்றேன் என்றது வினைமுற்றன்று, முற்றெச்சம். வெண்ணெயையும் பாலையும் இழந்த வயிற்றெரிச்சல் ஒருபுறமிருக்கவும் கண்ணபிரானுடைய அழகிலே பரவசமாகவே யீடுபட்டவளாதலால் மாலை நறுங்குஞ்சி நந்தன் மகன் என்று பரமபோக்யமாகப் பேசுகிறபடி காண்மின். மேலையகத்து நங்காய்! என்றது யசோதைப் பிராட்டியை விளிக்கிறது என்னவுமாம், வேறொரு அயல்வீட்டிடைச்சியை விளிக்கிறது என்னவுமாம். நங்காய் என்று ஏகவசநமாக இருந்தாலும் ஜாத்யேக வசநமாகக் கொண்டு பன்மைப்பொருள் கொள்ளலாம், மேலே காண்மின்கள் என்று பன்மையானமுற்று இருக்கையாலே. அன்றி, நங்காய்! என்று ஒருத்தியை யழைத்தவாறே கண்ணபிரானது தீம்புகளைக் கேட்கையிலுள்ள ஆவலினால் உள்ளிருந்து பலபெண்கள் எழுந்தோடி வர, ‘வந்துகாண்மின்கள்’ என்று அவர்களெல்லாரையும் நோக்கிச் சொல்லுகிறாளென்று நிர்வஹிப்பாருமுண்டு.

English Translation

O Lady of the main house, Yasoda! Nobody else came here, other than the flower-decked dark haired krishna, Nanda;s son I saw him as I went out to sell this buttermilk, I churned this morning. Come here and see! Not only the butter, the ten pitches of milk, I had saved are also empty. O what shall I do, what shall I do?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்