விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நின்றார் முகப்புச் சிறிதும் நினையான்*  வயிற்றை நிறைப்பான் உறிப்பால் தயிர்நெய்,*
    அன்றுஆய்ச்சியர் வெண்ணெய் விழுங்கி*  உரலோடு ஆப்புண்டிருந்த பெருமான் அடிமேல்,*
    நன்றுஆய தொல்சீர் வயல் மங்கையர்கோன்*  கலியன் ஒலிசெய்த தமிழ்மாலை வல்லார்,*
    என்றானும் எய்தார் இடர் இன்பம் எய்தி*  இமையோர்க்கும் அப்பால் செலஎய்துவாரே.   (2) 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கலியன் - ஆழ்வார்
ஒலி செய்  - அருளிச்செய்த
தமிர் மாலை - இப்பாசுரங்களை
வல்லார் - கற்றுவல்லவர்கள்
என்றாலும் - ஒருகாலும்

விளக்க உரை

இத்திருமொழியில் பாசுரந்தோறும் பரத்வகுணத்தை விஸ்தாரமாகவும் ஸௌலப்ய குணத்தைச் சுருக்கமாகவும் பேசியிருக்கச் செய்தே இதில் ஆழ்வார் தம்முடைய ஊற்றம் ஸௌலப்யகுணாநுபவத்தில்தான் - என்பது விளங்கும் இப்பாசுரத்தில், உடலோடாப்புண்டிருந்த பெருமானடிமேல் ஒலி செய்தது என்றாயிற்றுத் தலைக்கட்டுவது. நின்றார் முகப்புச் சிறிதும் நினையான் வயிற்றை நிறைப்பான் - இப்படிவயிறு தாரியாய்த் திரிகிறானே யென்று பலரு மேசுவர்களே! என்று சிறிதும் சுணங்காமல் அபூர்ணரைப்போலே வாரிவாரி யுண்டு வயிற்றை நிறைப்பவன். ஆச்ரிகர்களின் ஹஸ்தஸ்பர்சமுள்ள பொருள்களாலல்லது போது போக்கமாட்டாத மஹாகுணம் விளங்கும்.

English Translation

This garland of Tamil songs by fertile-fields-Mangai-King kaliyan is offered to the feet of the Lord who, oblivious of those around, went about filling his belly with the milk, curds, butter and Ghee from the pots of cowherd-dames, then was bound to a mortar. Those who master it will never despair, will enjoy a good life here, and will go beyond the world of celestials

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்