விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சுரிந்திட்ட செங்கேழ் உளைப்பொங்கு அரிமா*  தொலைய பிரியாது சென்றுஎய்தி, எய்தாது*
    இரிந்திட்டு இடங்கொண்டு அடங்காத தன்வாய்*  இருகூறுசெய்த பெருமான் முனநாள்* 
    வரிந்திட்ட வில்லால் மரம்ஏழும் எய்து*  மலைபோல் உருவத்து ஓர்இராக்கதி மூக்கு,*
    அரிந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால்*  அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உளை - பிடரி மயிர்களையுடைத்தாய்க் கொண்டு
பொங்கு - களித்துவந்த
அரிமா - குதிரைவடிவனான கேசியென்னுமசுரன்
தொலைய - முடிந்து போம்படியாக
பிரியாது - அதனைவிடாதே

விளக்க உரை

குதிரை வடிவுகொண்டு நலிய வந்த கேசியைக் கொன்றும் மராமரமேழ் செற்றும் சூர்ப்பணகைக்கு அங்கபங்கஞ் செய்தும் தன் விறலை வெறியிட்டுக்கொண்ட பெருமான் கிடீர் இன்று வெண்ணெய்க்களவுக்காகக் கட்டுண்டு கிடக்கிறானென்கிறார். இராக்கதியின் மூக்கை யரிந்திட்டது முன்பும் மரமேழெய்த்து பின்பும் நடந்ததாயிருக்க, இங்கு க்ரம்மாறாட்டமாகச் சொல்லியிருப்பது பொருந்துமோவென்று சங்கிக்கவேண்டா, எம்பெருமானுடைய திவ்ய சேஷ்டிதங்களை அநுபவித்தல் மாத்திரமே இங்கு விவக்ஷிதம், அநுபூர்வியாகச் சரித்திரம் எழுதிக் கொண்டு போகிறார்களன்று.

English Translation

When the impetuous horse kesin with a red mane came rushing against him, the Lord confronted him and fore apart his jaws, getting rid of him forever. He also shot an arrow piercing even trees, and chopped off the nose of the mountain-like demoness surpanakha. And look, now he is leashed to a mortar for stealing the cowherd-dame;s buffer!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்