விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    படைத்திட்டுஅது இவ்வையம் உய்ய முனநாள்*  பணிந்துஏத்த வல்லார் துயர்ஆய எல்லாம்,*
    துடைத்திட்டு அவரைத் தனக்குஆக்க என்னத்*  தெளியா அரக்கர் திறல்போய் அவிய,*
    மிடைத்திட்டு எழுந்த குரங்கைப் படையா*  விலங்கல் புகப்பாய்ச்சி விம்ம,*  கடலை-
    அடைத்திட்டவன்காண்மின் இன்று ஆய்ச்சியரால்*  அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உய்ய - உஜ்ஜீவிப்பதற்குறுப்பாக
பணிந்து - திருவடிகளிலே விழுந்து
ஏத்த வல்லார் - அதிக்கவல்லவர்களுடைய
துயர் ஆய எல்லாம் - துன்பமென்று பேர்பெற்றவற்றையெல்லாம்
துடைத்திட்டு - போக்கி

விளக்க உரை

முன்பு இவ்வுலகமடங்கலும் பிரளயங்கொண்டு உபஸம்ஹார மடைந்திருந்த காலத்து, மீண்டும் சேதநர்கள் தன்னை வணங்கி வழிபட்டு உஜ்ஜீவிக்கவேணு மென்று திருவுள்ளம்பற்றி, இறகொடிந்த பக்ஷிபோலே கிடந்த ஆன்மாக்களுக்கெல்லாம் கரண களேபரங்களைக் கொடுத்து ஸ்ருஷ்டித்து, அவர்களெல்லாம் தன்னைப் பணிந்து ஏத்தவல்லவர்களாகும்போது அவர்களது துயர்களையெல்லாம் தொலைத்திட்டு அவர்களைத் தனக்கு அந்தரங்க கிங்கரர்களாக்கிக் கொள்ளவேணும் என்று பாரித்திருக்கையில் ராக்ஷஸர்கள் ஏற்பட்டு அவ்வடியார்களுக்குத் தீங்கிழைத்த காலத்து, அவர்களது திறல்மாளும்படியாக வானரப்படைகளைத் துணைகொண்டு கடலை யணைசெய்த பெருமான்காண்மின் இன்று அஜ்ஞனும் அசக்தனுமாய்க்கொண்டு இடைச்சி கையிலே கட்டுண்டு கிடக்கிறான்! என்கிறார்.

English Translation

The Rakshasas failed to realise that the Lord elevates the whole world by wiping away the travails of devotees and accepting them unto himself. Then the Lord gathered an army of monkeys, made a bridge over the ocean with rocks, and destroyed them. An look, now he is leashed to a mortar for stealing the cowherd-dame;s butter!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்