விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பழித்திட்ட இன்பப் பயன் பற்றுஅறுத்துப்*  பணிந்துஏத்த வல்லார் துயர்ஆய எல்லாம்,*
    ஒழித்திட்டு அவரைத் தனக்குஆக்க வல்ல*  பெருமான் திருமால் அதுஅன்றியும்முன்,*
    தெழித்திட்டு எழுந்தே எதிர்நின்ற மன்னன்*  சினத்தோள் அவை ஆயிரமும் மழுவால்*
    அழித்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால்*  அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பயன் - அற்ப பலன்களை
பற்று அறுத்து - வாசனையோடே விட்டிட்டு
பணிந்து - திருவடிகளிலே விழுந்து
ஏத்த வல்லார் - துதிக்கவல்லவர்களுடைய
துயர் ஆய எல்லாம் - துன்பமென்று பேர்பெற்றவை யெல்லாவற்றை

விளக்க உரை

உலகத்தில் சேதநர்கள் பலவகைப்பட்டிருப்பர்கள், பலர் அற்பமான பலன்களை விரும்பி அவற்றைப் பெறுதற் பொருட்டுத் தேவதாந்தர பஜனஞ் செய்து போருவர், அவர்கள் கடக்க நிற்க. அங்ஙனம் தேவதாந்தர பஜனம் பண்ணாமல் எம்பெருமானையே பூஜிப்பவர்களும் ஐச்வர்யம் வேணுமென்று சிலரும், ஸந்தானம் வேணுமென்று சிலரும், ஸ்வர்க்க புருஷார்த்தம்படி பலவகைப்பட்ட காமனைகளுடனே எம்பெருமானைப் பணிந்தேத்துவாருண்டு. அப்படி யெல்லாமல்லாமல் ஹேயங்களான புருஷார்த்தங்களில் சிறிதும் விருப்பமின்றியே “உன்றன்னோ டுற்றோமே யாவோ முனக்கே நாமாட் செய்வோம்“ என்கிற அத்யவஸய மொன்றையே கொண்டு பணிந்து துதிக்க வல்லவர்களுடைய துன்பங்களை யெல்லாம் தொலைத்திட்டு, பெரிய திருவடி திருவடி வனந்தாழ்வான் முதலிய நித்யஸூரிகளைப்போலே அவர்களை அத்தாணிச் சேவகத்துக்கு ஆளாக்கிக் கொள்ளுமியல்வின்னான எம்பெருமானென்பன முன்னடிகள்.

English Translation

Devotees who cut their attachments to a life of pleasure and offer worship at the Lord Tirumal;s feet are rid of all their karmas by his grace. He then takes them unto himself. He is also the Lord Parasurama who cut as under the thousand arms of the warring king Kartavirya Arjuna with his battleaxe. And look, now he is leashed to a mortar for stealing the cowherd-dame;s buffer!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்