விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  அண்டத்து அமரர்கள் சூழ*  அத்தாணியுள் அங்கு இருந்தாய்!* 
  தொண்டர்கள் நெஞ்சில் உறைவாய்!*  தூமலராள் மணவாளா!*
  உண்டிட்டு உலகினை ஏழும்*  ஓர் ஆலிலையிற் துயில் கொண்டாய்!* 
  கண்டு நான் உன்னை உகக்கக்*  கருமுகைப் பூச் சூட்ட வாராய்.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

அத்தாணியுள் - அருகான இடத்திலே (ஸேவிக்கும்படி);
அமர்ர்கள் - தேவர்கள்;
சூழ - சூழ்ந்திருக்க;
அங்கு - அவர்கள் நடுவில்;
அண்டத்து - பரமபதத்தில்;

விளக்க உரை

பரமபதத்திலே ஏழுலகும் தனிக்கோல் செல்ல வீற்றிருப்பவனே! அவ்விருப்பைக் காட்டிலும் மிகவிரும்பி அன்பர்களின் நெஞ்சிலே யெழுந்தருளியிருப்பவனே! லக்ஷ்மீநாதனே! உலகங்களைப் பிரளயங் கொள்ளாதபடி வயிற்றிலே கொண்டு காப்பவனே! மாலையும் மயிர்முடியுமாக உன்னை நான் கண்டு களிக்குமாறு கருமுகைப்பூச் சூடவரவேணு மென்கிறாள்.

English Translation

O Lord seated in Vaikuntha surrounded by resident eternals, Lord living in the hearts of devotees1 o Bridegroom of the pure lotus-dame Lakshmi, you swallowed the seven worlds and slept as a child on a floating fig leaf! Come and wear these Karumukai flowers.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்