விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    யாயும் பிறரும்*  அறியாத யாமத்து,* 
    மாய வலவைப்*  பெண் வந்து முலைதர,*
    பேய்என்று அவளைப்*  பிடித்து உயிர் உண்ட,*
    வாயவனே! கொட்டாய் சப்பாணி மால்வண்ணனே! கொட்டாய் சப்பாணி.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

யாமத்து - நடுச்சாமத்திலே
மாயம் - வஞ்சகையாய்
அலவை பெண் - துஷ்டஸ்த்ரீயான பூதனை
வந்து - (கம்ஸனால் ஏவப்பட்டுத் திருவாய்ப்பாடிக்கு) வந்து
முலை தா - முலைகொடுத்தவளவிலே

விளக்க உரை

கண்ணபிரானுடைய தொட்டிற்பருவத்தில் நிகழ்ந்த சிறுச்சேவகங்களுள் பூதனையின் முலையைச் சுவைத் துயிருண்டது மிக்க பயங்கரமாதலால் அதனை அடுத்தடுத்து எடுத்துப் பேசுகிறாள். யாய் என்றாலும் மோய் என்றாலும் தாய்க்குப் பெயர். யாமம் - வடசொல் அலவை -கெட்டுப்போனவள் என்றபடி. பஹுவாக ஜல்பநம்பண்ணிக் கொண்டு வருபவள் என்றருளிச்செய்வர். பெரியவாச்சான் பிள்ளை. தாய்வடிவுகொண்டு வருகிறாளாகையாலே ‘என்குட்டனே! வா, என் முத்தமே! வா, என் செல்வமே! வா’ என்று போலிப் பிதற்றல்களைச் செய்துகொண்டு வருபவளென்றவாறு.

English Translation

In the dead of night, while neither your mother nor friends were watching, a beautiful stranger came and gave you her breast you discovered that she was an ogress, and took her life with your mouthil Clap Chappani O Pleasing one, clap chappani!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்