விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பெற்றார் தளைகழலப்*  பேர்ந்துஅங்கு அயல்இடத்து*
    உற்றார் ஒருவரும் இன்றி*  உலகினில்,*
    மற்றாரும் அஞ்சப்போய்*  வஞ்சப்பெண் நஞ்சுஉண்ட*
    கற்றாயனே! கொட்டாய் சப்பாணி!*  கார்வண்ணனே! கொட்டாய் சப்பாணி   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தளை - கால்விலங்கு
கழல - கழன்று விழும்படி
பேர்ந்து - வந்தவதரித்து
அங்கு - அவ்விடத்தில்
அயலிடத்து உற்றார் ஒருவரும் இன்றி - நெருங்கின உறவுமுறையார் ஒருவருமில்லாமற்போ

விளக்க உரை

அயலிடத்து உற்றா ரொருவருமின்றி - அயலிட மென்றது வேறொரிடமென்றபடியன்று, மிகவும் நெருங்கின ஸமீபஸ்தலத்தை அயலிட மென்பது பெரும்பான்மையான இலக்கண வழக்கம். ஆகவே ‘அயலிடத்து உற்றார்’ என்றது ஸமீப பந்துவைச் சொன்னபடி. நெருங்கின உறவுமுறையாகும் மற்றும் ஸாமாந்யரான உலகத்து உறவு முறையாகும் இல்லாத ஸமயத்திலே பூதனை முலைகொடுத்துக் கொல்லவர, அவளை நஞ்சுண்டு முடித்த கோபாலக்ருஷ்ணனே! சப்பாணி கொட்டவேணும் என்கை. இனி, முதலடிக்கு வேறு வகையாகவும் பொருள் கொள்ளலாம், பெற்றார் தளைகழல -(மதுரையில் வந்து பிறந்தவாறே) தந்தை தாயர்களின் கால் விலங்கு இற்று முறிந்து விழுந்ததும், அங்கு அந்த மதுரையில் நின்றும், அயலிடத்துப் பேர்ந்து -(‘ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவிலொருத்தி மகனா யொளித்துவளர’ என்கிறபடியே) அசலிடமான திருவாய்ப்பாடிக்குச் சென்று - என்னவுமாம். கன்று + ஆயன், கற்றாயன்.

English Translation

O Lord come to graze calves! By your birth you freed your parents from shackles, then with no relatives there, you moved into the midst of friends, who feared for you when you sucked the ogress Putana;s poison breast! Clap Chappani! O Cloud-hued Lord! Clap Chappani!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்