விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தாம்மோர் உருட்டி*  தயிர்நெய் விழுங்கிட்டு* 
    தாமோ தவழ்வர்என்று*  ஆய்ச்சியர் தாம்பினால்*
    தாம்மோதரக்கையால்*  ஆர்க்க தழும்புஇருந்த*
    தாமோதரா! கொட்டாய் சப்பாணி!*  தாமரைக் கண்ணனே! சப்பாணி

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆய்ச்சியர் தாம் - இடைச்சிகள்
தாம்பினால் ஆர்க்க - தாம்பால் கட்டவும்
கையால் மோதர - கைகளால் அடிக்கவும்
தழும்பு இருந்த - அதனால் காய்ப்பேறிக் கிடக்கின்ற
தாமோதரா - தாமோதரனே!

விளக்க உரை

இடைச்சிகள் மோரை ஒரு பாத்திரத்திலும் தயிரை மற்றொரு பாத்திரத்திலும் நெய்யை வேறொரு பாத்திரத்திலும் சேமித்து வைத்துவிட்டு உறங்குவர்கள், கண்ணபிரான் ஆங்காங்கு இருளிலே சென்று கையால் தடவிப் பார்ப்பன், மோர்க் குடம் கையிட்டவாறே வெறுத்து உருட்டி விடுவன்; தயிரும் நெய்யும் கைப்பட்டவாறே வாரி விழுங்கிடுவன், பின்னை ‘இந்தப்பூனையா இந்தப்பாலைக்குடித்தது!’ என்னவேண்டும்படி ஒன்று மறியாதவன் போலத் தவழ்நடையிடத் தொடங்குவன், சில குறிப்புகளாலே ஆய்ச்சியர் உணர்ந்தெழுந்து சென்று சேமித்து வைத்திருந்தவற்றை நோக்கினவாறே குறியழிந்திருப்பதையும் மோருருண்டிருப்பதையுங் கண்டு, கண்ணபிரானே இதுகொள்ளை கொண்டிருக்கவேணுமென்று நிச்சயித்து, இவனைத் தேடி வந்தவாறே இவன் ஒரு பாவமும் அறியாதவன் போன்று தவழ் நடையிட்டிருக்குமிருப்புக் கண்டு ‘இத்தனைகாரியஞ்செய்த இந்த மஹாநுபாவர் தவழ்கிறாரோ!’ என்று சொல்லித் தாம்புகளாற் கட்டியும் கையாலடித்தும் சில நலிவுகளைப் பண்ண அதனால் திருமேனி நிறையக் காய்ப்புக் காய்த்து இதுவே நிரூபகமாகத் தாமோதரனென்று திருநாமம் படைத்தவனே! சப்பாணி கொட்டவேணும். முதலடியில் ‘தாவி’ என்பது ‘தா’ என்று குறைந்து கிடக்கிறது.

English Translation

O Damadaral Lord with a leash over your stomachi you overturn the buttermilk pitchers, gobble up the Curds and Ghee, and incur the cowherd-women;s wrath. "He?, Toddler?", they say, bind your hands and beat you, clap chappani! O Lotus-eyed Lord1 Clap Chappani!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்