விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சீமாலிகன் அவனோடு*  தோழமை கொள்ளவும் வல்லாய்!* 
    சாமாறு அவனை நீ எண்ணிச்*  சக்கரத்தால் தலை கொண்டாய்!* 
    ஆமாறு அறியும் பிரானே!*  அணி அரங்கத்தே கிடந்தாய்!* 
    ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய்!*  இருவாட்சிப் பூச் சூட்ட வாராய்.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சீ மாலிகன் அவனோடு - மாலிகன் என்ற பெயரை யுடையவனோடு
தோழமை கொள்ளவும் - ஸ்நேஹம் செய்து கொள்ளுதற்கும்
வல்லாய் - வல்லவனாய்
அவனை - அந்த மாலிகனை

விளக்க உரை

மாலிகன் என்பான் ஒருவன் கண்ணபிரானுக்கு உயிர்த்தோழனாய் அப்பிரானிடத்திற் பலவகை ஆயுதங்களையும் பயின்று ஒருவர்க்கு மஞ்சாமல் அஹங்காரியாய் ஸாதுஜகங்களை ஹிம்ஸித்துக்கொண்டிருக்க, கண்ணபிரான் ‘நண்பனாகிய இவனை நாம் கொல்வது தகாதே! என்னசெய்யலாம்? என்று வ்யாகுலப்பட்டு, ஒருநாள் அவனைநோக்கி ‘நீ இப்படி செய்வது தகாது‘ என்ன, ஆஸுரப்ரக்ருதியான அந்த மாலிகன் தன்வாயில் வந்தபடி பிதற்றி ‘நீ எல்லா ஆயுதங்களையும் எனக்குக் கற்பித்தும் சக்ராயுதப்பயிற்சி மாத்திரம் செய்விக்கவில்லையே‘ என்று கண்ணன்மேற்குறைகூற, ‘இதில் பழகுவது உனக்கு முடியாது எனக்கே அஸாதாரணமானது‘ என்ன, ‘என்னால் முடியாதது மொன்றுண்டோ? நீ அவச்யம் அதைக் கற்பிக்கவேணும்‘ என்று அவன் நிர்ப்பந்திக்க, கண்ணன் இதுதான் தக்கஸமயம்‘ என்று திருவுள்ளத்திற்கொண்டு சக்ராயுதத்தை யெடுத்துத் தன் ஒற்றைவிரலால் சுழற்றி மேலெறிந்து கையிலேற்க, ‘இது எனக்கு அரிதோ‘ என்று மாலிகன் சொல்ல, ‘இது உனக்கு அரிதே‘ என்று கண்ணன் சொல்லவும் அதை அவன் கேளாமல் அச்சக்ராயுதத்தை வாங்கிச் சுழற்றி நிற்க, அச்சக்கரம் சுழன்றுவருவதற்கு இடம் போதாமையாலே அதன் வீச்சு இவன் கையிற் பிடிபடாமல் இவன் தலையை அரிந்து விட்டதென்பது இப்பாட்டில் குறித்த கதை. இவ்வரலாறு எந்தப் புராணத்திலுள்ளதென்று ஆராய்ந்து பார்த்தும் பலபெரியோர்களைக் கேட்டும் ஆகரம் அறியப் பெற்றிலேன் வந்த விடத்திற்கண்டுகொள்க. “***“ தத்ஸர்வம் தர்மவீர்யேண யதாவத் ஸம்ப்ரபச்யதி“ என்று ஸ்ரீ – சதுர்முகன்வரத்தினால் வால்மீகி முனிவர் பகவதவதார வ்ருத்தாந்தங்களைத் தாமாக ஸாக்ஷத்கரித்ததுபோலே ஆழ்வாரும் மயர்வற மதிகல மருளப்பெற்றுத் தாமாக ஸாக்ஷாத்கரித்தவற்றில் இவ்வரலாறு ஒன்று என்பர் பெரியோர், இப்பிரபந்த்த்தின் ஈற்றுத்திருமொழியின் ஆறாம்பாசுரத்தின் வியாக்கியானத்திலே பெரியவாச்சான் பிள்ளைதாமும் இதை ஸ்பஷ்டமாக அருளிச்செய்துளர். ‘மாலிகன்‘ என்பதே அவன்பெயர், மேன்மைப் பொருளைத்தரும் ‘ஸ்ரீ‘ என்ற சொல் ‘சீ‘ எனத்திரிந்துவந்து சீமாலிகன் எனக்கிடக்கிறது. க்ருஷ்ண ஸ்நேஹத்தால்வந்த மேன்மையுண்டே அவனக்கு, அவனைக்கொல்வது ஆவச்யகமானபோது ‘தோழினைக் கொன்றான்‘ என்னும் பழி தனக்கு வாராமல் ‘தன்னாலே தான் முடிந்தான்‘ என்று உலகத்தார்சொல்லும்படி கண்ணபிரான் மாலிகனை உபாயமாக்க் கொன்றன்னென்பார் ‘சாமாறவனை நீ யெண்ணிச் சக்கரத்தால் தலைகொண்டாய்‘ என்றார். “தோழமைக்கொள்ளவும்“ என்னற உம்மை எதிரது தழுவியதாய், தலைகொள்ளவும் என்பதைக் காட்டும்.

English Translation

O Lord, you befriended even the Asura Malikan, then deciding that he should die, you showed him how to use the discus, which then severed his head! Lord who knows what lies ahead, Lord reclining in beautiful Srirangam, you rid me of my miseries. Come and wear these Iruvatchi flowers.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்