விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பெற்றத் தலைவன் எம்கோமான்*  பேர்அருளாளன் மதலாய்,* 
    சுற்றக் குழாத்து இளங்கோவே!*  தோன்றிய தொல்புகழாளா,*
    கற்றுஇனம் தோறும் மறித்து*  கானம் திரிந்த களிறே* 
    எற்றுக்குஎன் அம்மம் உண்ணாதே*  எம்பெருமான் இருந்தாயே 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இன கேரவே - யுவராஜாவானவனே!
தோன்றிய தொல் புகழாளா - எங்கும் பாவி விளங்குகின்ற நித்ய கீர்த்தியை யுடையவனே!
கானம் தோறும் - காடுகள் தோறும்
கன்று இனம் - கன்றுகளின் கூட்டங்களை
மறித்து - மடக்கி மேய்த்து

விளக்க உரை

பசுக்களுக்குத் தலைவனாயும் எங்களுக்குக் கோமானாயும் பரமதயாளுவாயுமிருக்கிற நந்தகோபனுடைய மகனே! என்று (ஏகஸம்போதநமாகக் கொண்டு) பொருள் சொல்லிவிடக் கூடுமாயினும், அக்கண்ணபிரான்தானே மேல்விழுந்து வந்து முலையுண்பதற்காக அவனைப் புகழ்ந்து பேசும் பிரகரணமாதலால் மூன்று விளிகளாகப் பிரிந்து பொருள்படத்தகும். பெற்றத்தலைவன்! என்றது அண்மைவிளி, பசுக்களுக்கெல்லாம் ரக்ஷகனே! என்றபடி. அந்த பசுக்களில் வாசியற்ற எங்களுக்கும் ரக்ஷகனே! என்கிறது இரண்டாவது விளி. பேரருளாளன் என்பதையும் தனியே பிரித்து அண்மைவிளியாகக் கொண்டு ‘பேர்ருளாளனே!’ என்றும், மதலாய்! - குமாரனே! என்றும் பொரள் கொள்ளலாமாயினும், பெரியவாச்சான்பிள்ளை இங்ஙனே யருளிச்செய்யாமையாலே ‘பேர்ருளாளன் மதலாய்!’ என்றவளவும் ஒருவிளியாகக் கொள்ளத்தக்கது. நந்தகோபர்க்குப் ‘பேர்ருளாளன்’ என்றே ப்ரஸித்தமாகப் பெயர் வழங்குமாம். பேரருளாளனென்றால் எல்லாப் பொருள்களிடத்தும் ஈரநெஞ்சு இளநெஞ்சு பொருந்தியவன் என்று பொருள். நந்தகோபர் பசும்புல்மேல் நடந்தாலும் தரையில் காலூன்றாதே ‘எந்தஜந்துவுக்கு என்ன நலிவுநேருமோ’ என்று அஞ்சியே மெதுவாக நடப்பவராம். இந்தத் தன்மை எதுவரையில்? கண்ணபிரான் தனக்குத் திருக்குமாரனாக வந்து பிறக்கும் வரையில். அதற்குப் பிறகோ வென்னில், அந்ததயாளுத்வம் மாறி, “கூர்வேற் கொடுந்தொழிலன் நந்தகோபன்“ என்னும்படியாயினான், ஏனென்னில், கண்ணபிரானிடத்துப் பிஜீவினால், தொட்டிலின்கீழ் ஓர் சிற்றெறும்பு ஊர்ந்தாலும் புலியின்மேற் பாயுமாபோலே வேற்படையைத் தீட்டிக்கொண்டு பாய்வனாம். ஆகவே, இங்குப் பேரருளான னென்றது முன்னைய நிலைமைபற்றியென்க. காதில் தோடுகழற்றினாலும் தோடிட்டகாது என்னலாமிறே. மதலாய் – ‘மதலை’ என்பதன் ஈறு திரிந்த விளி. (சுற்றக் குழாத்திளங்கோவே!) பந்து வர்க்கத்திலுள்ளவர்கட்கெல்லாம் இளவரசாகக் குலாவப்படுமவனே! என்கை (தோன்றிய தொல்புகழாளா!) தாய்தந்தையர் வார்த்தையைத் தவறாதவன் என்று நெடுநாளைக்கு முன்னமே (ஸ்ரீராமாவதாரத்தில் புகழ் படைத்தவனல்லையோ நீ, இப்போது நானழைப்பதற்கு இசைந்துவந்து அம்முண்ணாவிடில் உன் தொல்புகழ்க்குக் குறையாகுங்கிடாய் என்றுணர்த்துகிறபடி. (கானந்தோறும் கற்றினம் மறித்துத் திரிந்தகளிறே) “காடுகளூடுபோய்க் கன்றுகள் மேய்த்து மறியோடி“ என்கிறபடியே ஒன்றிரண்டு காடுகளன்றிக்கே, காடுகள் தோறும் திரள்திரளான கன்றுகளை மேய்த்து ஒரு மத்தகஜம் உலாவுமா போலே உலாவினவனே!, அந்த விடாயெல்லாந் தீர அமம்முண்ண வேண்டுவது ப்ராப்தமாயிருக்க என் அஃதுண்ணாமே திரிகிறாய்? உன்னுடைய விடாய் தீர்வதற்காகவும் நீ முலையுண்ணவேணும், நான் தரிப்பதற்காகவும் நீ முலையுண்ணவேணுங்காண்.

English Translation

O Chief among cow-grazens, my Liege! O Son of the benevolent Nandagopai O Crown-prince among the band of relatives! O Lord of eternal fame! O Jewel-elephant roaming through every forest with your cows! O My Master! What took your so long to come and take suck?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்