விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உந்தம் அடிகள் முனிவர்*  உன்னைநான் என்கையில் கோலால்* 
    நொந்திட மோதவும் கில்லேன்*  நுங்கள்தம் ஆ-நிரை எல்லாம்*
    வந்து புகுதரும் போது*  வானிடைத் தெய்வங்கள் காண* 
    அந்திஅம் போது அங்கு நில்லேல்*  ஆழிஅம் கையனே! வாராய்

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

முனிவர் - சீறுவர்
நான் - நானோவென்றால்
என் கையில் கோலால் - என் கையிலுள்ள கொம்பினால்
உன்னை நொந்திட மோதவும் கில்லேன் - உன்னை நோகும்படி அடிக்கவும் மாட்டேன்,
உங்கள் தம் ஆ நிரை எல்லாம் - உங்களுடைய பசுக்கூட்டங்களெல்லாம்

விளக்க உரை

யசோதைப் பிராட்டி இப்படி வேண்டி வருந்தி அழைக்கச் செய்தேயும் கண்ணபிரான் இசைந்து வருதலின்றியே நாற்சந்திகளிலெ விளையாட்டுப் பராக்காக நிற்க, அச்சமுறுத்தி அழைக்கிறான். “அஞ்சவுரப்பா ளசோதை ஆணாடவிட்டிட்டிருக்கும்“ என்கிறபடியே, யசோதை கொடுந்தண்டனைகள் செய்யகில்லாள், ஆகையாலே அவன் இவளைக் கண்டால் தீம்பில் ஒன்று பத்தாகப் பணைப்பது வழக்கம், ஆகவே, ‘உன்னை நான் தண்டிக்கமாட்டேனாகிலும் உன் தகப்பனார் உன்னை லகுவாக விடமாட்டார்காண்’ என்று அச்சமுறுத்துகிறாள் உந்தமடிகள் முனிவர் என்று. உங்கள் முதலியார் சீறுவர்கிடீர் என்கிறாள். உந்தம் என்று பன்மையாகச் சொன்னது வழக்கு பற்றிய வழுவமைதி. ‘பயலே! உங்களண்ணா எங்கே?’ என்றாற் போன்ற உலக வழக்குகள் காண்க. ‘உந்தமடிகள் முனிவர்’ என்று சொல்லும்போது யசோதை தன்கையிலும் தடி வைத்துக்கொண்டிருந்தாளாகையாலே அதனைக் கண்டு அஞ்சி ஓடிப்போய் விடுவனோ வென்று சங்கித்து, பிரானே! நான் அது செய்யகில்லேனென்கிறாள். என்கையில் கோலுள்ளது உண்மைதான், ஆனால் இது கொண்டு காரியங் கொள்ளும்படியான வன்மை எனக்கில்லை காண் என்கிறாள். கீழ்ப்பாசுரங்களிற் போலே இப்பாசுரத்தில் ‘அமம்முண்ண’ என்பதின்றியே ‘வாராய்’ என்று மாத்திரம் உள்ளது, நீ முலையுண்ணாதொழியில் ஓழி, உனக்கொரு அவத்யம் விளையாதபடி அவ்விடத்தைவிட்டு இவ்விடத்தே வந்து சேர்ந்தாற்போதும் என்பது உட்கருத்து.

English Translation

O Lord, wielder of the discus! Your father will get angry; alas, I do not have the heart to beat you with my cane. when your cows return of dusk the gods in the ksy will be watching. Please do not stand there. Come take suck

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்