விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மைத்த கருங்குஞ்சி மைந்தா!*  மாமருதுஊடு நடந்தாய்,* 
    வித்தகனே விரையாதே*  வெண்ணெய் விழுங்கும் விகிர்தா,*
    இத்தனை போதுஅன்றி என்தன்*  கொங்கை சுரந்து இருக்ககில்லா,* 
    உத்தமனே! அம்மம் உண்ணாய்*  உலகுஅளந்தாய் அம்மம் உண்ணாய்       

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

விரையாதே - ஸாவகாசமாக
வித்தகனே - ஆச்சரியசக்திவாய்ந்தவனே!
விரையாதே - ஸாவகாசமாக
வெண்ணெய் விழுங்கும் - வெண்ணெயை வாரி விழுங்கவல்ல
விகிர்தா - விலக்ஷணனே!

விளக்க உரை

‘விரையாதே வெண்ணெய் விழுங்கும்’ என்றதில் இவனுடைய சாதுரியம் தொனிக்கும், வெண்ணெயுண்பதில் பதற்றத்தினால் யசோதே படுக்கையிற் சென்று சாய்வதற்கு முன்னமே அவஸரப்பட்டு எடுத்து விழுங்கிவிட்டுக் கையும்பிடியுமாய் அகப்பட்டுக்கொள்ளாதே ஆரப்பொறுத்து மெதுவாகச் சென்று வாரி விழுங்குவனாம். விகிர்தா! ‘விக்ருத’ என்னும் வடசொல் திரிந்து விளியுருபு ஏற்றது. அச்சொல் -வேறுபட்டவனென்னும் பொருளுடையது, எங்குங் கண்டறியாத சாதுர்யமுடையவனே! என்றவாறு.

English Translation

O Dark-tressed Lord! You walked between the twin Marudu trees! O Naughty child, forever eating butter! My swollen breasts cannot stand the wait so long. O Pure one, take suck! O Lord who measured the Earth, take suck!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்