விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மக்கள் பெறுதவம் போலும்*  வையத்து வாழும் மடவார்* 
    மக்கள் பிறர்கண்ணுக்கு ஒக்கும்*  முதல்வா மதக்களிறுஅன்னாய்*
    செக்கர் இளம்பிறை தன்னை வாங்கி*  நின் கையில் தருவன்* 
    ஒக்கலை மேல்இருந்து*  அம்மம் உகந்து இனிது உண்ண நீ வாராய்

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

செக்கர் இளபிறை தன்னை - செவ்வானத்திலிருக்கின்ற பாலசந்திரனை
வாங்கி - பிடித்து
நின் கையில் - உன் கையிலே
தருவன் - கொடுப்பேன்
ஒக்கலை மேல் இருந்து - (என்) இடுப்பிலே இருந்து கொண்டு

விளக்க உரை

“வையத்து வாழும் மடவார் பிறர் மக்கள் கண்ணுக்கு மக்கள் பெறுதவமொக்கும் முதல்வா“ என்று அந்வயிப்பது. (முதலடியில் போலும் என்றது அசை) இந்த நாட்டில் வாழ்கின்ற ஸ்த்ரீகளென்ன, பொதுவாக மனிதர்களென்ன ஆக எல்லோருடையவும் கண்ணுக்கு ‘பிள்ளை பெறுகைக்கு நோற்கும் நோன்புதாள் இங்ஙனே ஒரு வடிவு கொண்டதோ?’ என்னும்படி புலப்படுகிறவனே! என்றபடி. யார் கண்டாலும் ‘இவன் நம்முடைய குழந்தையாயிருக்கக் கூடாதோ?’ என்றே ஆசைப்படும்படியாக திவ்யஸுந்தர மங்களவிக்ரஹம் படைதவனே! என்பதாகக் கொள்க. இவன் நடக்கிற நடை யானை நடக்குமாபோலே நெஞ்சைக் கவர்வதாயிருந்த்தனால் மதக்களிறன்னாய்! என்கிறாள். செக்கர் - செவ்வானம். குழந்தைகள் ஆகாசத்தில் சந்திரனைக் கண்டு விரும்பி அவனைக் கையில் பிடித்துத் தருமாறு அபேக்ஷிப்பதும், அவற்றின் உவப்புக்காகத் தாய் தந்தை முதலானார் ‘சந்தமாமா! வா வா’ என்றழைத்துப் போதுபோக்குவதும் உலகவியற்கை. எம்பெருமான் மநுஷ்யஸஜரதீயனாய் அவதரித்த காலத்தில் இந்த விருப்பத்தையும் கொண்டிருந்தனனென்பது பெரியாழ்வார் திருமொழியில் (1-4) ‘தன்முகத்துச் சுட்டி!’ என்னுந் திருமொழியிலும் விரிவாகக் காணத்தக்கது.

English Translation

O Master, they very epitome of penance that men and women of the world would undertake to beget a child! O Rutted Elephant, I will give you the crescent-Moon from the sky and your hands! Come to my lap and to suck with sweet pleasure

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்