விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வங்க மறிகடல் வண்ணா!*  மாமுகிலே ஒக்கும் நம்பீ* 
    செங்கண் நெடிய திருவே*  செங்கமலம் புரை வாயா,*
    கொங்கை சுரந்திட உன்னைக்*  கூவியும் காணாது இருந்தேன்* 
    எங்குஇருந்து ஆயர்களோடும்*  என் விளையாடுகின்றாயே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கொங்கை காந்திட - என் முலைகளிலே பரல்காக்க
உன்னை கூவியும் - உன்னையழைத்தும்
காணாது இருந்தேன் - நீவரக்காண்கின்றிலேன்,
ஆயர்களோடும் - இடைப்பிள்ளைகளோடே
எங்கு இருந்து - எவ்விடத்திலிருந்துகொண்டு

விளக்க உரை

கடல்போலவும் காளமேகம் போலவும் விளங்குகின்ற வடிவையுடையவனே! அவயவ சோபையெல்லாம் ஒருதட்டும் கண்ணழகுமாத்திரம் ஒரு தட்டுமாம்படி * கரியவாகிப்புடைபரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்ட அப்பெரியவாய திருக்கண்களையுடையவனே!, ‘திருவுக்குந்திருவாகிய செல்வா!’ என்னவேண்டும்படி சிறப்புமிக்கவனே! செங்கமலப்பூப்போன்ற திருவாயையுடையவனே! ‘தாய்முலை சுரப்பது எப்போதோ?’ என்று நீயே எதிர்பார்த்திருந்து முலைசுரக்குமளவிலே வந்து அமம்முண்ணப்ராப்தமாயிருக்க அது செய்யாத தன்றியும், நான் கூவியழைத்தும் வாராதிருக்கிறாயே! என்றவாறே, நெடுந் தூரத்திலிருந்து ‘இதோ வருகிறேன்’ என்று குரல் காட்டினான் கண்ணபிரான், அதைக்கேட்ட யசோதை ‘மச்சொடு மாளிகையேறி மாதர்கள் தம்மிடம்புக்குக் கச்சொடு பட்டைக் கிழிந்துக் காம்பு துகிலவை கீறி, நிச்சலுந் தீமைகள் செய்பவனாகையாலே இவன் மச்சு மாளிகைகளிலே புக்கு இடைப்பெண்களிடம் ஏதோ தீம்பு செய்கின்றான் போலும்’ என்று நினைத்து ‘எங்கிருந்து?’ என்றான், அதாவது, நீ கண்ணுக்குப் புலம்படாமலே குரல் காட்டுகிறாயே!, எங்கிருந்து பேசுகிறாய்? என்றாள். அதுகேட்ட கண்ணபிரான், நாம் ஆய்ச்சிகளோடிருப்பதாக யசோதை சங்கிக்கிறாள் போலும்.

English Translation

O Dar ocean-hued Lord! O Laden-cloud-hued Lord1 O Lord with auspicious red eyes! O Child with lotus-like lips! My breasts are swelling with milk. I keep calling, but you do not come. I wonder what mischief you are planning with the cowherd-boys!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்