விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சந்த மலர்க்குழல் தாழ*  தான் உகந்துஓடி தனியே-
    வந்து,*  என் முலைத் தடம்தன்னை வாங்கி*  நின் வாயில் மடுத்து,*
    நந்தன் பெறப்பெற்ற நம்பீ!*  நான் உகந்துஉண்ணும் அமுதே,* 
    எந்தை பெருமானே! உண்ணாய்*  என் அம்மம் சேமம் உண்ணாயே (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நின் வாயில் மடுத்து - உனது வாயிலே நிறைத்துக் கொண்டு
உண்ணாய் - உண்ணவேணும்,
என் அம்மம் - என்னுடைய முலைப்பாலாகிற
சேமம் - க்ஷேமத்தளிகையை
உண்ணாய் - உண்ணவேணும்

விளக்க உரை

கண்ணபிரானே! குழலலைய அலைய ஓடிவந்து என்முறைகளை உன்வாயில் மடுத்துப் பாலுண்ணவேணுமென்று அழைக்கிறாள். ‘சந்தமலர்க்குழல்’ என்றதனால் “செண்பக மல்லிகையோடு செங்கழுநீரிருவாட்சி, அழகிய மலர்களை குழலிலே சூட்டியிருக்கின்றாளென்பது உணரத்தக்கது. குழல்தாழ வர வேணுமென்றது -முலையுண்பதிலுண்டான பேராவல் விளங்குமாறு தன்னைப் பேணாதே ஓடிவரவேணுமென்றபடி. * தன்னோராயிரம் பிள்ளைகளோடு இவன் விளையாடுகிறானாகையாலே அவர்களையும் பலராமனையும் விட்டத் தனியே வர வேணுமென்றழைக்கிறாள். (முலைத்தடந்தன்னை வாங்கி நின்வாயில் மடுத்து) யசோதைப்பிராட்டிக்கு இப்படியும் ஒரு ஆசை போலும், தன்கையாலே முலையை யெடுத்துக்கண்ணபிரானது திருப்பவளத்திலே தான் மடுப்பதிலுங்காட்டில் அவன் தானே பிடித்து வாயில் மடுத்து உண்ணப்பெறில் அதிலே ஒரு போக்ய தாதியம் கண்டவள்போலும். (நந்தன்பெறப்பெற்ற நம்பீ!) ‘நந்தன் பெற்ற நம்பீ!’ என்றால் போராதோ? ‘பெறப் பெற்ற’ என்பானேன்? என்னில், ஈச்வரனுக்கு இது அலப்யலாபம் என்பது தோற்றுதற்காகவே இப்படி அருளிச்செய்த்தென்ப நந்தகோபன் பிள்ளையாகப் பெறும்படியான பாக்கியம் பெற்றிவனே! என்றவாறு. இவனுடைய பிறப்பினால் நந்தகோபனுக்கு ஏற்றம், நந்த கோபனுக்குப்பிள்ளையாகப் பிறந்த்தனால் இவனுக்கு ஏற்றம் என்றிறே நம் ஆசார்யர்கள் நிர்வஹிக்கிறபடி.

English Translation

O Lord born to Nandagopa, my sweet ambrosial My Master! with your beautiful flower-tresses hanging low, come running here alone and take my swollen breasts. Place your auspicious lips on it and take suck! Take suck!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்