விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கவள யானை பாய்புரவி*  தேரொடு அரக்கர்எல்லாம்-
    துவள,*  வென்ற வென்றியாளன்*  தன்தமர் கொல்லாமே*
    தவள மாடம் நீடுஅயோத்தி*  காவலன் தன்சிறுவன்*
    குவளை வண்ணன் காண ஆடீர்*  குழமணி தூரமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கொல்லாமே - (நம்மை) கொல்லாதபடி,
தவளம் மாடம் நீடு - வெண்மையான மாடமாளிகை களினால் நீண்டிருக்கிற
அயோத்தி - அயோத்திமா நகர்க்கு
காவலன் தன் - அரசரான தசரதருடைய
சிறுவன் - திருக்குமார்ராய்

விளக்க உரை

இப்பாட்டும் கீழ்ப்பாட்டுப்போலவே அரக்கருள்ளாரை யழைப்பதாம். ‘அரக்கருள்ளீர்!’ என்ற விளி கீழ்ப்பாட்டிலிருந்து வருவித்துக் கொள்ளத்தக்கது. யானைகளும் குதிரைகளும் தேர்களுமாகிய சேனையுறுப்புகளெல்லா வற்றோடுங்கூட அரக்கர் தொலையுமாறு கொன்று வெற்றி பெற்ற ஆண்புலியின் கிங்கரர்களான அந்த சக்ரவர்த்தி திருமகன் கண்டுமகிழும்படியாகக் குழமணிதூரமாட எங்களோடே வந்து கூடுங்கள் என்கிறார்கள்.

English Translation

The victorious blue-lotus-hued Lord is the price of white-mansioned Ayodhya. His monkey army, overran our Lanka destroying the battle elephants, impetuous horses, tall chariots and our crowned kings. Lest they kill us, dance for them the kulamani Duram

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்