விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மாற்றம்ஆவது இத்தனையே*  வம்மின் அரக்கர்உள்ளீர்* 
    சீற்றம் நும்மேல் தீர வேண்டின்*  சேவகம் பேசாதே*
    ஆற்றல் சான்ற தொல்பிறப்பின்*  அநுமனை வாழ்கஎன்று* 
    கூற்றம் அன்னார் காண ஆடீர்*  குழமணி தூரமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மாற்றம் ஆவது இத்தனையே - (உங்கட்கு நாங்கள்) சொல்லும் வார்த்தை இவ்வளவே,
நும் மேல் - உங்கள்மேல்
சீற்றம் - (ஸ்ரீராம ஸைந்யங்களுக்குண்டான) கோபம்
தீர வேண்டில் - தணிய வேண்டுமாகில்
சேவகம் பேசாதே - (நீங்கள் இனியும்) மிடுக்குச் சொற்களைப் பேசுதல் தவிர்ந்து

விளக்க உரை

கீழ்த் திருமொழியில் “தாம் பொங்கத்தம் பொங்கோ“ என்றும், இத்திருமொழியில் கீழ்ப் பாட்டளவும் “குழமணி தூரமாடுகின்றோம்“ என்றும் சொல்லிவருகிற ராக்ஷஸர்களின் திரளில் புகாமல், (இரு பிளவாகப் பிளவுண்டு விழும்போதும் குறுக்கு வாட்டாக விழுவனேயன்றித் தலை சாய்ந்தவாறாக விழமாட்டேன்) என்று சொன்ன ராவணனுடைய நெறியிலே நிற்பவர்களான அரக்கர்களும் சிலருண்டோகையாலே இன்னமும் அவர்கள் மீசை முறுக்கிக்கொண்டு வீரவாதம் செய்திடக் கண்டு அவர்களையும் தங்கள் திரளிலே வந்து புகுந்து உய்யுமாறு அழைக்கிறார்கள் இவ்வரக்கர்கள். மாற்றாவது இத்தனையே - ஸ்ரீராமபிரானுடையவும் அவனது சேனைத் தலைவர்களுடையவும் பராக்கிரமத்தைப் பற்றி இப்போது நாங்கள் உங்கட்கு விவரித்துச் சொல்ல வேண்டியதொன்றுமில்லை, அதனைப்ரத்யக்ஷமாகவே கண்டிருக்கின்றவுங்களுக்கு நாங்கள் எடுத்துச் செல்லவேணுமோ, ஆகையால் அதனைச் சொல்லாதே இப்போது நாங்கள் உங்கட்குச் சொல்லுவதாவது, (வம்மினரக்கருள்ளீர்! இத்யாதி) இக்ஷ்வாகுவம்சத்திலேயெ சேர்ந்துவிட்ட விபீஷணாழ்வான் போல்வாரை நாங்கள் அழைக்கப் போகிறோமோ? இன்னமும் ராக்ஷஸர்களாகவே யிருக்கின்ற உங்களையாயிற்று அழைக்கிறோம். இப்படி வாருங்கள், இராவணனோடு கூடவே ஒழிந்துபோய்விட உங்கள் கருத்தாகில் ஒழிந்துபோமின் வானரவீரர்களுக்கு நும்மேல் சீற்றம் தணிந்து உயிர் வாழப்பெற வேணுமென்று விரும்பியிருப்பீர்களாகில் இனி மீசை முறுக்குதலையும் மார்பு நெறித்தலையும் விட்டுத்தொலையுங்கள், பிறப்பே பிடித்துப் பெருவீரனை அனுமானுக்குப் பல்லாண்டு பாடுங்கள், உங்களுடைய மிருத்யுவே வடிவெடுத்து வந்திருக்கிறான் என்னலாம்படியான வானர வீரர்கள் காணும்படியாக எங்களோடே கூடிக் குழமணிதூரமாடுங்கள் என்கிறார்கள். மாற்றம் - வாய்வார்த்தை. சேவகம் -வீரவாதம். அனுமான் பிறந்தவுடனே ஸூரியனைப்பார்த்து அவனைப்பிடித்துப் பக்ஷிப்பதாக ஆகாசத்திற் கிளம்பிப்போன வராதலால் ‘ஆற்றல் சான்ற தொல்பிறப்பின்’ என்று அடைமொழி கொடுக்கப்பட்டது. ஆஞ்சனேயரொருவரை வாழ்த்தினால் மற்றுள்ளார் அனைவரும் ப்ரஸந்நராய்பிடுவர்களென்று ஸூசிப்பிக்கப்பட்டது.

English Translation

O, Those of the Rakshasa clan! come gather. If you want their anger to subside, here is all your need to say, instead of boastful words, call "Glory bel" to Hanuman, the powerful one from birth, and let the death-givers sit and watch you dance the kulamani Duram

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்