விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மணங்கள் நாறும் வார்குழலார்*  மாதர்கள் ஆதரத்தைப்*
    புணர்ந்த சிந்தைப் புன்மையாளன்*  பொன்ற வரிசிலையால்*
    கணங்கள்உண்ண வாளிஆண்ட*  காவலனுக்கு இளையோன்*
    குணங்கள் பாடி ஆடுகின்றோம்*  குழமணி தூரமே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வரி சிலையால் - அழகிய வில்வழியாக
வாளி ஆண்ட - அம்புகளைப் பிரயோகித்த
காவலனுக்கு - ஸர்வாக்ஷகரான பெருமாளுடைய
இளையோன் - திருத்தம்பியாரான லக்ஷ்மணருடைய
குணங்கள் பாடி - திருக்குணங்களைப் பாடிக்கொண்டு

விளக்க உரை

ஸ்த்ரசாபல்யத்தை மேற்கொண்டதனால் நீசர்களில் முதல்வனாகக் கணக்கிடப்பெற்ற இராவணன் முடிந்துபொகும்படியாகவும் அவனுடலைக் கபுக்கள் முதலியவை ஏறியுண்ணும்படியாகவும் வில்லிலே அம்பைத்தொடுத்த பெருமாளுக்குத் தம்பியாய் ;இளையபெருமாள்; என வழங்கப்படுபவரான லக்ஷ்மணருடைய திருக்குணங்களைப் பாடிக்கொண்டு குழமணிதூர மாடுகின்றோமென்கிறார்கள். ;மணங்கள் நாறும்வார்குழலார் என்றது சிந்தை - ஸ்த்ரீவிஷயமான காதலைக்கொண்ட நெஞ்சுவாய்ந்தவன் என்றபடி.

English Translation

Our lowly king Ravana, obsessed with throughts of company with fragrant-coiffured dames was fed to the elements by the great bow-wielder Rama;s arrows. We sing his younger brother Lakshmanai;s praise, we dance the Kulamani Duram

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்