விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஞாலம் ஆளும் உங்கள் கோமான்*  எங்கள் இராவணற்குக்*
    காலன்ஆகி வந்தவா*  கண்டு அஞ்சி கருமுகில்போல்*
    நீலன் வாழ்க சுடேணன் வாழ்க*  அங்கதன் வாழ்கஎன்று*
    கோலம்ஆக ஆடுகின்றோம்*  குழமணி தூரமே 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அஞ்சி - பயப்பட்டு,
கரு முகில் போல் - ;காளமேகம் போன்ற
நீலன் வாழ்க - நீலன் வாழவேணும்,
சுடேணன் வாழ்க - ஸுஷேணன் வாழவேணும்
அங்கதன் வாழ்க - அங்கதன் வாழவேணும்

விளக்க உரை

வானரமுதலிகாள்! பூமண்டலம் முழுவதையும் தனிக்கோல செலுத்தி ஆளப்பிறந்த உங்கள் ஸ்வாமியான இராமபிரான் எங்களுக்குத் தலைவனாயிருந்த ராவணனுக்கு ம்ருத்யுஸ்வரூபியாய் வந்தாரென்பதை நன்கு தெரிந்து கொண்டோம், இனி நாம் மார்பு நெறித்து வாழ்வதென்பதில்லை யென்று நிச்சயித்துக் கொண்டு உங்களுக்கு மங்களாசாஸநஞ் செய்வதையே யாத்திரையாகக் கொண்டோம், நீலனுக்குப் பல்லாண்டு, ஸுஷேணனுக்குப் பல்லாண்டு, அங்கதனுக்குப் பல்லாண்டு; என்று சொல்லுபவர்களாய்க் குழமணி தூரமாடுகின்றோங் காண்மினென்கிறார்கள்.

English Translation

The world ruler your king became the Lord of death for our king Ravana, Long live your Nila, Long! live your sushenan, Long live your! Angadan. We fear them and we dance the kulamani Duram

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்