விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    எருதுகளோடு பொருதி*  ஏதும் உலோபாய் காண் நம்பீ!* 
    கருதிய தீமைகள் செய்து*  கஞ்சனைக் கால்கொடு பாய்ந்தாய்!* 
    தெருவின்கண் தீமைகள் செய்து*  சிக்கென மல்லர்களோடு* 
    பொருது வருகின்ற பொன்னே*  புன்னைப் பூச் சூட்ட நீ வாராய்.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

எருதுகளோடு - ஏழு ரிஷபங்களுடன்;
பொருதி - போர்செய்யா நின்றாய்;
ஏதும் - எதிலும் (ஒன்றிலும்);
உலோபாய் காண் - விருப்பமில்லாதவனாயிரா நின்றாய்;
கருதிய - (கம்ஸன் உன்மேல் செய்ய) நினைத்த;
தீமைகள் - தீம்புகளை;

விளக்க உரை

பொருதி = முன்னிலையொருமை நிகழ்கால வினைமுற்று. (எருதுகளோடே பொருதது) காலாந்தரமாயிருக்கச் செய்தேயும் தற்காலம் போலே ப்ரகாசிக்கையாலே ‘பொருதி’ என்று வர்த்தமாகமாகச் சொல்லுகிறது என்ற பெரிய ஜீயர் உரை நோக்கத்தக்கது. உலோபாய் = ‘???’ என்ற வடமொழியின் திரிபாகிய ‘உலோபம்’ என்பதனடியாக வந்த எதிர்மறை முற்று. உடம்பைப் பேணுதல் உயிரைப்பேணுதல் ஒன்றும் செய்யாதிராநின்றாய் என்று கருத்து. போம் வழியில் வண்ணானைக் கொன்று வஸ்த்ரங்களைப் பறித்துக்கொண்டமை கம்ஸனுடையவில்லை முறித்தமை குவலயாபீடத்தைக் கொன்றமை முதலியன - இங்கு தெருவின் கண் செய்த தீமைகளாகும். கண் - ஏழனுருபு.

English Translation

My Lord, you battled with the bulls for Nappinnai. See, you have no concern. Returning Kamsa’s cruelty you leapt over him and smote him. Acting wickedly in the streets you quickly pick up a fight with the wrestlers. My child, precious as gold, come wear these Punnai flowers.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்