விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அங்கு அவ்வானவர்க்கு ஆகுலம் தீர*  அணி இலங்கை அழித்தவன் தன்னை* 
    பொங்கு மாவலவன் கலி கன்றி*  புகன்ற பொங்கத்தம் கொண்டு,*  இவ்உலகினில்-
    எங்கும் பாடி நின்று ஆடுமின் தொண்டீர்!*  இம்மையே இடர் இல்லை,*  இறந்தால்- 
    தங்கும்ஊர் அண்டமே கண்டு கொள்மின்*  சாற்றினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ!   (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இறந்தால் - மரணமானபின்பு
தங்கும் ஊர் - நீங்கள் போய்ச்சேர்ந்து நிலை நிற்குமிடம்
அண்டமே - பரமபதமேயாம்,
கண்டு கொண்மின் - (இதனை அநுபவத்தாலே) கண்டு கொள்ளுங்கள்
சாற்றினோம் - இஃது எல்லாருமறியச்சொன்னோம்

விளக்க உரை

“அங்கவ்வானவர்க்கு“ எனப்பாடம் வழங்கும். ஆகுலம் -வட சொல் விகாரம். (பொங்குமாவலவன்) இவ்வாழ்வார் தனதாகக் கொண்டு ஏறிச் செலுத்திய சிறந்த குதிரைக்கு ‘ஆடல்மா’ எனப் பெயர் வழங்கும், அதுவே இங்குப் பொங்குமா எனப்பட்டது. வலவன் - வல்லவன், ஸமர்த்தன், பாகன் என்றபடி. பொங்கத்தம் – ‘தடம் பொங்கத்தம் பொங்கோ’ என்றதன் ஏகதேசாநுகாரம். கீழ் ஒன்பது பாசுரங்களின் முடிவிலும் “தடம் பொங்கத்தம் பொங்கோ“ என்றது இராமபிரான் வெற்றியை ராக்ஷஸர்கள் எடுத்துரைத்தபடி. இப்பாட்டின் முடிவில் ‘தடம் பொங்கத்தான் பொங்கோ’ என்றது எம்பெருமான் வெற்றியை ஆழ்வார்தாம் உரைக்கிறபடி. இத்திருமொழியானது இவ்விருள் தருமா ஞாலத்தைத் தோற்பித்து வெற்றி பெறும்படியைச் சொல்லுகிற தென்பாருமுளர்.

English Translation

Devotees! In the yore the Lord destroyed the city of Lanka and rid the gods of their misery. Go about singing and dancing these Pongattam sons, by deft-horse-rider-Kalikanri. Miseries of this birth will Vanish; after the body is shed, you will reside in Vaikunta. We say this with certainty, Pongattam Pongo!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்