விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஓத மாகடலைக் கடந்துஏறி*  உயர்கொள் மாக்கடிகாவை இறுத்து* 
    காதல் மக்களும் சுற்றமும் கொன்று*  கடி இலங்கை மலங்க எரித்து*     
    தூது வந்த குரங்குக்கே*  உங்கள் தோன்றல் தேவியை விட்டுக் கொடாதே* 
    ஆதர் நின்று படுகின்றது அந்தோ!*  அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

காதல் - (இராவணனுடைய) அன்புக்கு இலக்கான
மக்களும் - அக்ஷகுமாரன் முதலிய புத்திரர்களையும்
சுற்றமும் - அந்தரங்க சேவகர்களையும்
கொன்று - கொலை செய்து
கடி இலங்கை மலங்க எரித்து - காவலையுடைத்தான லங்கையானது கலங்கும்படியாகத் தீக்கொளுவி

விளக்க உரை

வாரீர் வானர வீரர்காள்!, முன்னமே இங்குத் தூதுவந்த அனுமானென்னும் ஓர் வானர வீரன் ஒருவராலும் கடக்க முடியாத கடலைக்கடந்து வந்து அசோகவனத்தையும் முறித்து, பல போர்வீரர்களையும் சேனைத்தலைவர்களையும் அக்ஷகுமாரனையும் கொன்று லங்காதஹநமும் செய்து ஆக இப்படியெல்லாம் காட்டின வீரத்தைக்கண்டு “தூதுவந்த குரங்கின் சக்தியே இதுவானால் இதனை அனுப்பின பிரபுவின் நிலைமை எப்படியிருக்கும்!“ என்று ஊஹித்துணர்ந்து அப்போதே “இனி நாம் உயிர்வாழ்ந்திருக்கவேண்டில் ஸீதையை விட்டுக்கொடுப்பதே உரியது“ என்று துணிந்து அது செய்திருக்கவேண்டும், அந்தோ! அது செய்யாமையினாலே இப்போது அநர்த்தப்பட வேண்டிற்றாயிற்று, அஞ்சுகின்றோம் என்கிறார்கள். தோன்றல் - ஸ்வாமி, ஆதர் - அறிவில்லாதவர்.

English Translation

O Masters! The monkey messenger Hanuman leap over the ocean and entered our city, played havoc in the fall fruit orchards, killed the Rakshasan sons and relatives, then set fire to the city, Then itself, we should have handed over your master;s lady to him. Alas, the travails we face now! We dance in fear to the sound of the wardrum Pongattam Pongo!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்