விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    புள்ளினை வாய் பிளந்திட்டாய்!*  பொரு கரியின் கொம்பு ஒசித்தாய்!* 
    கள்ள அரக்கியை மூக்கொடு*  காவலனைத் தலை கொண்டாய்!* 
    அள்ளி நீ வெண்ணெய் விழுங்க*  அஞ்சாது அடியேன் அடித்தேன்* 
    தெள்ளிய நீரில் எழுந்த*  செங்கழுநீர் சூட்ட வாராய்.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

புள்ளினை - பகாஸுரனை;
வாய்பிளந்திட்டாய - வாய்கிழித்துப் பொகட்டவனே;
பொரு - யுத்தோந்முகமான;
கரியின் - குவலயாபீடத்தின்;
ஒசித்தாய் - பறித்தவனே;
 

விளக்க உரை

கொக்கின் வாயைக் கீண்டொழித்தவனே! நீ எது செய்தாலும் உன்னுடைய வல்லமையைக் கண்டு நான் வெறுமனேயிருக்க வேண்டியதாயிருந்தும் நீ வெண்ணெணை வாரி உட்கொண்டதைக் கண்டு ‘இவன் இப்படியே வேறு வீடுகளிற் போய்ச் செய்தால் பழிவருமே’ என்று நினைத்து அஞ்சாமல் அடித்துவிட்டேன்; அவஸரப்பட்டு நான் செய்தவிதைப் பொறுத்துச் செங்கழுநீர்ப்பூச் சூடவா என்கிறாள். புஷ்பம் மேலே பட்டாலும் வாடும்படியான உன்னுடைய ஸௌகுமார்யத்தைக் கண்டு அஞ்ச வேண்டியதாயிருக்க அப்படி அஞ்சாமல் அடித்ததைப் பொறுத்துப் பூச்சூட வரவேணுமென்பதாகவுங் கொள்ளலாம். அடியேன் = ஸ்ரீக்ருஷ்ணனுடைய வீரத்திலீடுபட்டுச் சொல்லுகிற சொல்:” மரபுவழுவமைதி; அடித்தபின்பு அநுதாபங்கொண்டு அடியேன் என்றாளெனினுமாம்.

English Translation

You ripped the beak of the bird Bakasura, you plucked the tusk of the rutted elephant Kuvalayapida, you cut the nose of the demoness Supanakha and the heads of the demon king Ravana. When you gobbled hutter, I this lowely self, beat you without fear! Come here and wear this fresh-water lotus garland.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்