விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பத்தர் ஆவியை*  பால்மதியை,*  அணித்-
    தொத்தை*  மாலிருஞ் சோலைத் தொழுதுபோய்*
    முத்தினை மணியை*  மணி மாணிக்க-
    வித்தினைச்,*  சென்று விண்ணகர்க் காண்டுமே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அணி தொத்தை - ஆபரணமாலை போன்றவனும்
முத்தினை - முத்துப்போன்றவனும்
மணியை - நீலமணிபோன்றவனும்
மணி மாணிக்கம் - சிறந்த மாணிக்கம் போன்றவனும்
வித்தினை - ஜகத்காரண பூகனுமான எம்பெருமானை

விளக்க உரை

‘பத்தராவி’ என்பதற்கு இருவகையாகப் பொருளருளிச்செய்வர், பக்தர்களுக்கு ஆவியாயிருப்பவன் என்பது ஒருபொருள், பக்தர்களைத் தனக்கு ஆவியாகவுடையவன் என்பது மற்றொரு பொருள். “ஜ்ஞாநீத்வாத்மைவ மே மதம்“ என்று கீதையிலருளிச்செய்தபடியே ஞானிகளான பக்தர்களைத் தனக்கு உயிர்நிலையாக வுடையவன் என்றவாறு. (பால் மதியை) சந்திரனைப்போல எப்பொழுதும் ஆனந்தமாகக் கண்டு கொண்டிருக்க வேண்டிய வடிவுபடைத்தவன் என்றபடி. “அணித்தொத்தை“ என்றும் “மணித்தொத்தை“ என்று பாடபேதம் வியாக்கியானத்திலுள்ளது. தொத்து -பூங்கொத்து, மாலைபையுஞ் சொல்லும்.

English Translation

We worshipped the Lord, -devotees life-breath, cool as the milky Moon beautiful as a gem-set garland, in Tirumalirumsolai, Today we shall go and have his Darshan, -precious as pearls, gems and emeralds, -in Tiruvinnagar

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்