விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வானை ஆர்அமுதம்*  தந்த வள்ளலை* 
    தேனை நீள்வயல்*  சேறையில் கண்டுபோய்*
    ஆனை வாட்டி அருளும்*  அமரர்தம்-
    கோனை,*  யாம் குடந்தைச்சென்று காண்டுமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அமுதம் தக்க - அமுதமெடுத்தளித்த
வள்ளலை - உதாரனும்,
தேனை - தேன்போல இனியவனும்
ஆனை - (குவலயாபீடமென்கிற) யானையை
வாட்டி அருளும் - கொன்றொழித்தவனும்

விளக்க உரை

தன்னை விரும்பாதே பிரயோஜநாந்தரத்தை விரும்பினவர்கட்கும் திருமேனியைப் போணாதே கடல்கடைந்து அமுதளித்த பரமோதாரனைத் திருச்சேறையிலே ஸேவித்தோம், இனித் திருக்குடந்தையிலே ஸேவிப்போமென்கிறார்.

English Translation

The benevolent Lord who have ambrosia to the gods. the nectar of devotees, gave us Darshan in Tiruccherai amid fertile fields. He is the Lord of gods, the Lord who killed the elephant easily. Today we shall go and have hid Darshan in Tirukkudandal

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்