விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சுடலையில்*  சுடு நீறன் அமர்ந்தது ஓர்*
    நடலை தீர்த்தவனை*  நறையூர்க் கண்டு,*  என்-
    உடலையுள் புகுந்து*  உள்ளம் உருக்கிஉண்*
    விடலையைச் சென்று காண்டும்*  மெய்யத்துள்ளே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சுடலையில் - சுடுகாட்டில்
சுடுநீறன் - சுட்டசாம்பலைப் பூசுமவனான ருத்ரனுக்கு
அமர்ந்தது - நேர்ந்ததான
ஓர் நடலை - ஒரு கஷ்டத்தை
தீர்த்தவனை - போக்கியருளினவனும்

விளக்க உரை

பிரமனுடைய சிரமொன்றைக் கிள்ளியெறிந்த்தனா லுண்டான கஷ்டம். ‘உடலையுள்’ என்றவிடத்து ஐகாரம் -சாரியை. ‘இப்படிப்பட்ட குணசாலியுண்டோ!’ என்று நெஞ்சு எப்போதும் ஈடுபட்டிருக்கும்படி செய்தலே உடலுள்புகுந்து உள்ளமுருக்கியுண்பதா மென்க. விடலை - இச்சொல்லுக்குப் பலபொருள்களுண்டு, - ஆண்மகன், திண்ணியன், பாலைநிலத்தலைவன், மணவாளன், முப்பதுவயதுக்குட்பட்டவன். இப்பொருள்களுள் ‘பாலைநிலத்தலைவன்’ என்னும்பொருள் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்திற் கொள்ளப்பட்டது. “இப்பாலையான பூமியைத் தனக்கு இருப்பிடமாக்கினபடியாலே பாலைநிலமான ஸம்ஸாரத்துக்குத் தலைவனானவனை.“ என்று விவரணமும் செய்தருளினர். “தம்முடைய ஹ்ருதயத்திற் காட்டில் பாலைநிலமில்லை யென்றிருக்கிறார்“ என்ற ஸ்ரீஸூக்தியுங்காண்க.

English Translation

The Lord who ended the misery of Siva, -wearer of the ash from cremation grounds, -gave us Darshan in Tirunaraiyur. Deftly entering into my person, he melts and drinks my heart. Today we shall go and have his Darshan in Tirumeyyam

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்