விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வேலை ஆல்இலைப்*  பள்ளி விரும்பிய*
    பாலை ஆர்அமுதத்தினை*  பைந்துழாய்*
    மாலை ஆலியில்*  கண்டு மகிழ்ந்து போய்* 
    ஞாலம் உன்னியைக் காண்டும்*  நாங்கூரிலே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வேலை - (பிரளயக்) கடலிலே
ஆல் இலை - ஆலந்தளிரிலே
பள்ளி விரும்பிய - திருக்கண் துயில்வதை உகந்தருளினவனும்
பாலை - பால்போன்றவனும்
ஆர் அமுதத்தினை - அருமையான அமிருதம் போன்றவனும்

விளக்க உரை

பிரளயப் பெருங்கடலில் உலகமனைத்தையும் உட்கொண்டு ஆலந்தளிரில் திருக்கண் துயில்கொண்ட பெருமானைத் திருவாலியிலே கண்டோம், இனித் திருநாங்கூரிலே சென்று காணக் கடவோமென்கிறார். வேலை –‘வேலா’ என்னும் வடசொல் விகாரம், கடற்கரையை உணர்த்தும் இச்சொல் இலக்கணையால் கடலை உணர்த்துகின்றது. ஞாலமுன்னி - இதற்கு இரண்டுவகையாகப் பொருள் கொள்ளலாம். உலகத்தைச் சிந்திப்பவன், உலகத்தால் சிந்திக்கப்படுபவன் என்று. உலகத்தைச் சிந்திப்பவன் என்றது -உலகத்துக்கு ரக்ஷணம் செய்யும்படிகளையே சிந்தித் திருப்பவன் என்றபடி.

English Translation

The Lord who slept as a child in the ocean floating on flag leaf, my precious ambrosia. I the cool Tulasi-garland-Lord - we enjoyed him Darshan in Tiruvall; today we shall go and have his Darshan in the wold-renowned Tirunangur

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்