விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பொன்னை மாமணியை*  அணி ஆர்ந்ததுஓர்-
    மின்னை*  வேங்கடத்து உச்சியில் கண்டுபோய்*
    என்னை ஆளுடை ஈசனை*  எம்பிரான்-
    தன்னை*  யாம் சென்று காண்டும்*  தண்காவிலே.   (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

(நெருநல்) - நேற்று
வேங்கடத்து உச்சியில் - திருவேங்கடமலையின் சிகரத்தில்
கண்டு - ஸேவித்து,
(இன்று) - இன்றைக்கு
தண்காவிலே சென்று காண்டும் - திருத்தண்காவிலே போய் ஸேவிப்போம்.

விளக்க உரை

முதற்பாட்டிலுள்ள ‘நெருநெல்’ ‘இன்று’ என்னுஞ் சொற்கள் பாசுரந்தோறும் அந்வயிக்கவுரியன. நெருநெல் வேங்கடத்துச்சியில் கண்டு இன்று தண்காவில்காண்டும் என்றவாறு. இங்ஙனமே மேற்பாசுரங்களிலும் காண்க. இப்பாசுரங்களில் எம்பெருமானுக்கு இடுகிற விசேஷணங்களை யெல்லாம் ஒருசேர அந்வயித்துக் கொண்டு முடிவில் ‘அத்தலத்தில்கண்டோம், இத்தலத்தில் காண்போம்’ என்பதாக அந்வயித்துக்கொள்க. அன்றி, பாசுரப்போக்கு உள்ளபடியே அந்வயித்துக் கொள்வதும் தகும். திருத்தண்கா - காஞ்சீபுரத்திலுள்ள விளக்கொளியெம்பெருமாள் ஸந்நிதி திருத்தண்கால் வேறு, அது பாண்டிநாட்டிலுள்ளது.

English Translation

My gold, my gem, my beautiful lightning, my Lord and Master, -we hade his Darshan in Venkatam; today we shall go and have his Darshan in Tiruttanka

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்