விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆலும்மா வலவன் கலிகன்றி*  மங்கையர் தலைவன்*  அணிபொழில்- 
    சேல்கள் பாய்கழனித்*  திருக்கோட்டியூரானை,*
    நீல மாமுகில் வண்ணனை*  நெடுமாலை இன்தமிழால் நினைந்த,*  இந்-
    நாலும் ஆறும் வல்லார்க்கு*  இடம்ஆகும் வான்உலகே.    (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கலிகன்றி - ஆழ்வார்,
அணி யொழில் - அழகிய சோலைகளையும்
சேல்கள் பாய் கழனி - மீன்கள் துள்ளிவிளையாடுகின்ற கழனிகளையுமுடைத்தான
திருக்கோட்டி யானை - திருக்கோட்டியூரில் எழுந்தருளியிருப்பவனும்
முகில் வண்ணனை - மேகம்போன்ற நிறத்தை யுடையவனும்

விளக்க உரை

இந்நாலுமாறும் வல்லார்க்கு இடம் வானுலகு ஆகும் -இத்திருமொழியை ஓதுமவர்கள் எவ்விடத்தில் வஸிக்கிறார்களோ அவ்விடமே பரமபதம் என்பதாகவும் கொள்ளலாம். “ஓராயிரத்துளிப்பத்தும் உரைக்கவல்லார்க்கு வைகுந்தமாகும் தம்மூரெல்லாம்“ என்றாரிறே நம்மாழ்வாரும். “திருவாய்மொழியின் மணந்தருமின்னிசை மன்னுமிடந்தொறும்....புக்கு நிற்குங் குணந் திகழ் கொண்ட லிராமாநுசன்“ என்றாற்போலே, இத்திருமொழியைப் பாடுமவர்களுள்ளவிடத்தே பரமபதநாதனும் நித்யமுக்தர்களும் வந்து படுகாடு கிடப்பர்களென்றவாறு. ஆலும் மா -ஆடல்மா என்றபடி. ஆழ்வார் தனதாகக்கொண்டு ஏறிச் செலத்திய சிறந்த குதிரைக்கு இப்பெயர் வழங்கும். வலவன் -வல்லவன், ஸமர்த்தன், பாகன் என்றபடி. நெடுமாலை நினைந்த இந்நாலுமாறும் -எம்பெருமானது திருக்குணங்களை மணத்தினால் நினைக்க, அவ்வநுபவம் உள்ளடங்காமல் வெளியே பாடல்களாகப் பொசிந்த தென்க.

English Translation

This is a garland of sweet Tamil songs for the dark gem-hued Lord, resident of fish-dancing-streams-and-groves-Tiruk-kottiyur, by Mangai king Kalikanri, deft horse rider. Those who master it will enter the world of celestials

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்