விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பூங்குருந்து ஒசித்து ஆனைகாய்ந்து*  அரிமாச் செகுத்து,*  அடியேனை ஆள்உகந்து- 
    ஈங்கு என்னுள் புகுந்தான்*  இமையோர்கள் தம் பெருமான்,*
    தூங்கு தண்பலவின்கனி*  தொகுவாழையின் கனியொடு மாங்கனி*
    தேங்கு தண்புனல் சூழ்*  திருக்கோட்டியூரானே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

குருந்து - குருந்தமரத்தை
ஒசித்து - முறித்துத் தள்ளினவனாயும்
ஆனை - (குவலயாபீட மென்னும்) யானையை
காய்ந்து - சீறிமுடித்தவனாயும்
அரிமா - (கேசியென்னும்) குதிரையை

விளக்க உரை

“ஆனைகாய்ந்து“ என்பதில் காய்ந்து என்றது, உபசாரவழக்கு, கொன்று என்றவாறு. அரிமா – ‘ஹரி’ என்னும் வடசொல்லுக்குள்ள பல பொருள்களில் குதிரை என்பதும் ஒருபொருள், ‘யா’ என்பது விலங்கின பொதுப் பெயர், குதிரையாகிய விலங்கு என்றபடி.

English Translation

The Lord of celestials who made me his servant and entered into me, came in the yore as krishna and broke two marudu trees, killed on elephant, and ripped a horse;s jows. He resides in Tirukkottiyur where Mango, Jackfruti and banana fruit in plenty, in orchards with cool streams

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்