விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கன்று கொண்டு விளங்கனி எறிந்து*  ஆநிரைக்கு அழிவுஎன்று,*  மாமழை-
    நின்று காத்துஉகந்தான்*  நிலமாமகட்கு இனியான்,*
    குன்றின் முல்லையின் வாசமும்*  குளிர்மல்லிகை மணமும் அளைந்து,*  இளம்-
    தென்றல் வந்துஉலவும்*  திருக்கோட்டியூரானே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

விளங்கனி - கபித்தாஸுரன் மீது
எறிந்து - வீசியெறிந்து இரண்டையும் முடித்தவனும்
ஆநிரைக்கு அழிவு என்று - பசுக்கூட்டத்திற்குத் தீங்கு வந்ததேயென்றுபரிந்து
மா மழை - பெருமழையை
நின்று காத்து - நிலைநின்று தடுத்து
உகந்தான் - திருவுள்ளமுவந்தவனும்

விளக்க உரை

முதலடியில் ‘அழிவென்று’ என்றபாடத்திற் காட்டிலும் ;அழவன்று; என்றபாடம் சிறக்கும், வியாக்கியானத்திற்கும் நன்கு பொருந்தும், “பசுக்களுக்கு அழிவு வருமன்று“ என்பது வியாக்கியான வாக்கியம். (அழிவன்று - கெடுதல் நேர்ந்த காலத்திலே).

English Translation

The sweet Lord of Dame Earth came in the yore as Krishna, swirled the Asuric calf against a wood-apple tree, then held a mountain against rains to protect the cows. He resides in Tirukkottiyur where the cool breeze blows over mountain Mullai and cool Jasmine flowers, wafting their fragrance everywhere

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்