விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    காவலன் இலங்கைக்கு இறைகலங்க*  சரம் செல உய்த்து,*  மற்றுஅவன்-
    ஏவலம் தவிர்த்தான்*  என்னை ஆளுடை எம்பிரான்,*
    நாவலம் புவிமன்னர் வந்து வணங்க*  மால் உறைகின்றது இங்குஎன,* 
    தேவர் வந்துஇறைஞ்சும்*  திருக்கோட்டியூரானே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சரம் - பாணங்களை
அவன் - அவ்விராவணனுடைய
ஏவலம் - பாணப்ரயோக ஸாமர்த்தியத்தை
தவிர்த்தான் - தொலைத்தவனும்
என்னை ஆளுடை - என்னை அடிமைகொண்டருளினவனுமான

விளக்க உரை

“காவலன்“ என்பதை எம்பிரானுக்கு விசேஷணமாக்கவுமாம், இராவணனுக்கு விசேஷணமாக்கவுமாம். காக்க வல்லவன் என்றபடி. எம்பிரானுக்கு விசேஷணமாகக் கொள்ளில் “காக்குமியல்வினன் கண்ண பெருமான்“ என்கிறபடியே அவனுடைய இயற்கைக் குணமாகிய ரக்ஷகத்வத்தைச் சொல்லுகிறது. இராவணனுக்கு விசேஷணமாகக் கொண்டால், ரக்ஷகத்வத்தை ஏறிட்டுக் கொண்டவன் என்றதாகிறது. ஸர்வேச்வரனொருவனுளனென்றும் அவனுக்கு அடிமைப்பட்டு உய்தல் நம்முடைய ஸ்வரூபமென்றும் உணரப்பெறாதேதானே ஸர்வரக்ஷகனாக அஹங்கரித்திருந்த இராவணனானவன் ;இன்றளவும் நாம் அநுபவியாதிருந்த பரிபவம் இன்று அநுபவிக்கலாயிற்றே! இன்னமும் என்னாகுமோ!“ என்று மனந் தளும்பும்படியாக அவன்மீது அம்புகளைப் பொழிந்து அவனுடைய மிடுக்கைத் தவிர்த்தவனும், இப்படிப்பட்ட வீரச்செயலுக்கு என்னை தோற்பித்து அடிமை கொண்டருளினவனுமான பெருமான் திருக்கோட்டியூரான். செல் - செல்ல, ‘மற்றவன்’ என்றதில், மற்று - அசை, ஏவலம் – ‘நாமே அம்பு எய்யவல்லோம், நம்மோடொப்பாரில்லை’ என்னும்மிடுக்கு.

English Translation

My Lord and master, the adorable Mal, fired arrows on Lanka;s king Ravana and ended his fyranny. All the kings of Jambu Dvipa gather in Tirukkottiyur and say, "The Lord resides here!" then bow and worship, while the celestials come and offer praise

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்