விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஏறும் ஏறி இலங்கும்ஒண் மழுப்பற்றும்*  ஈசற்கு இசைந்து,*  உடம்பில் ஓர்-
    கூறுதான் கொடுத்தான்*  குலமாமகட்கு இனியான்,*
    நாறு செண்பகம் மல்லிகை மலர்புல்கி*  இன்இள வண்டு,*  நல்நறும்-
    தேறல்வாய் மடுக்கும்*  திருக்கோட்டியூரானே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இனியான் - போக்யனுமான எம்பெருமான்
இன் இன வண்டு - இனிய இளவண்டுகளானவை
நாறு - மணம்மிக்க
செண்பகம் - செண்பகப்பூவையும்
மல்லிகை மலர் - மல்லிகைப்பூவையும்

விளக்க உரை

அன்பே வடிவான பிராட்டியோடு வாசியற அஹங்காரமே வடிவான ருத்ரனுக்கும் திருமேனியிலே இடங்கொடுக்கும் சீலகுணம் வாய்ந்த பெருமான் திருக்கோட்டியூரிலே ஸந்நிஹித னென்கிறார்.

English Translation

To the axe-wielding bull-riding siva, the Lord obligingly gave a place on his person, as also to the lady of the lotus Lakshmi, He resides in Tirukkottiyur where beautiful, youthful bees hover over fragrant senbakam and Jasmine flowers, then sip aroma-nectar and dance

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்