விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வெள்ளியான் கரியான்*  மணிநிற வண்ணன் விண்ணவர் தமக்குஇறை,*  எமக்கு-
    ஒள்ளியான் உயர்ந்தான்*  உலகுஏழும் உண்டு உமிழ்ந்தான்,*
    துள்ளுநீர் மொண்டு கொண்டு*  சாமரைக் கற்றை சந்தனம் உந்தி வந்துஅசை,* 
    தெள்ளுநீர்ப் புறவில்*  திருக்கோட்டியூரானே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வெள்ளியான் - (கிருதயுகத்தில்) வெளுத்த நிறமுடையவனும்
கரியான் - (கலியுகத்தில்) கறுத்தநிற முடையவனும்
மணி நிறம் வண்ணன் - (த்வாபரயுகத்திலே) நீல மணியின்நிறம் போன்ற நிறமுடையவனும்
விண்ணவர் தமக்கு இறை - நித்யஸூரிகளுக்கு நிர்வாஹகனும்
உயர்ந்தான் - எல்லாரினும் மேம்பட்டவனும்

விளக்க உரை

எம்பெருமான் ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு நிறத்தைக் கொள்வன், கிருதயுதத்திலுள்ளவர்கள் ஸத்வகுணம் நிறைந்தவர்களாய் சுத்தமான நிறத்தை உகக்குமவர்களாகையாலே அவர்கட்காகப் பால்போன்ற வெண்ணிறத்தைக் கொள்வன், அந்த நிறமே இங்கு வெள்ளியான் என்று அநுஸந்திக்கப்பட்டது. கலியுகத்தில் எந்த நிறங்கொண்டாலும் ஈடுபடுவாரில்லாமையாலே இயற்கையான கரியநிறத்தைக் கொள்வன், அந்தநிறமே இங்கு ‘கரியான்’ என்று அநுஸந்திக்கப்பட்டது. த்வாபரயுகத்தில் பசுமைநிறத்தைக் கொள்வன், அந்த நிறமே இங்கு மணிநிறவண்ணன் என்று அநுஸந்திக்கப்ட்டது. அயர்வறு ம்மரர்களதிபதியாய் ஸர்வஸ்மாத்பரனாயிருந்துவைத்து எனக்கு வைத்தகண் வாங்கவொண்ணாதபடி தன்வடிவழகைக் காட்டியருள்பவன் உலகங்களை யெல்லாம் பிரளயாபத்துக்குத் தப்பிப்பிழைக்கச் செய்தருளியது போலவே நம்மை ஸம்ஸாரப்ரளயத்துக்குத் தப்பவைப்பதற்காகத் திருக்கோட்டியூரிலே வந்து ஸந்திஹிதனாயிராநின்றான். சாமரைக் கற்றை, சந்தநவ்ருக்ஷம் முதலிய சீரிய பொருள்களைக் கொழித்துக் கொண்டு பிரவஹிக்கின்ற மணிமுத்தாறு அருகே விளங்கப்பெற்றதாம் இத்தலம்.

English Translation

The spotless one, the dark one, the gem-hued one, the Lord of celestials, the transcendent Lord, reveals himself to us. He swallowed the seven worlds and brought them out, He resides in Tirukkottiyur where streams in groves bring Sandal-wood and whisk-hair in heaps

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்