விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மச்சொடு மாளிகை ஏறி*  மாதர்கள்தம் இடம் புக்கு* 
  கச்சொடு பட்டைக் கிழித்து*  காம்பு துகில் அவை கீறி* 
  நிச்சலும் தீமைகள் செய்வாய்!*  நீள் திருவேங்கடத்து எந்தாய்!* 
  பச்சைத் தமனகத்தோடு*  பாதிரிப் பூச் சூட்ட வாராய்.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மச்சொடு மாளிகை ஏறி - நடுநலையிலும் மேல் நிலையிலும் ஏறிப்போய்;
மாதர்கள் தம் இடம்புக்கு - பெண்களிருக்கிற இடத்திலே புகுந்து;
கச்சொடு - (அவர்களுடைய முலைகளின் மேலிருந்த) கச்சுக்களையும்;
பட்டை - பட்டாடைகளையும்;
கிழித்து - கிழித்துவிட்டு;

விளக்க உரை

மேல்மாடங்களில் ஏகாந்தமாக வாழ்கின்ற பெண்களிடத்திலும் சென்று அவர்களுடைய கச்சுகளையும் பட்டாடைகளையும் கரைகட்டின சேலைகளையும் கிழித்துத் தீம்பு செய்வதை விட்டிட்டுப் பூச்சூட வரவேணுமென்பதாம். கச்சு - ‘கஞ்சுகம்’ என்ற வடசொற்சிதைவு துகிலவை = அவை ஸ்ரீ முதல் வேற்றுமைச் சொல்லுருபு. நிச்சல் - ‘நித்யம்’ என்ற வடசொல் விகாரம். தமநிகம் - வடசொல்.

English Translation

Climbing up the balcony and rooftops, you enter the ladies’ chamber, then tear up their pleated silk corset and shred their frilled linen. Daily you play such mischief. O My Lord of Tiruvenkatam hills, come wear these Padiri flowers with green Davanam springs.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்