விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    எங்கள் எம்இறை எம்பிரான்*  இமையோர்க்கு நாயகன்,*  ஏத்து அடியவர்-
    தங்கள் தம்மனத்துப்*  பிரியாது அருள்புரிவான்,*
    பொங்கு தண்அருவி புதம்செய்ய*  பொன்களே சிதற இலங்குஒளி,*
    செங்கமலம் மலரும்*  திருக்கோட்டியூரானே.   ,

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இமை யோர்க்கு நாயகன் - நித்யஸூரிகளுக்குத் தலைவனும்
ஏத்து - துதிக்கின்ற
அடியவர் தங்கள் தம் - பக்தர்களினுடைய
மனத்து - நெஞ்சிலே
பிரியாது - பிரியாமல் பொருந்தியிருந்து

விளக்க உரை

‘எங்களிறை’ என்றோ ‘எம்மிறை’ என்றோ அருளிச் செய்தால் போதுமாயிருக்க ‘எங்களெம்மிறை’ என்பானேன்? புநருக்தியன்றோ? என்னில், ‘எங்களுக்கே இறை’ என்று திடமான அவயாரணந் தோற்றச் சொல்லவேண்டுவது ஆழ்வார்க்கு விவக்ஷிதமாதலால் இரட்டித்துச் சொல்லப்பட்டதென்க. பிறர்க்கும் ஸ்வாமியாய் எங்களுக்கும் ஸ்வாமியாயிருக்கிறனல்லன், எங்களுக்கே அஸாதாரண ஸ்வாமியா யிருக்கிறானென்கிறார். சரணாகதிகத்யத்தில் எம்பெருமானார் என்றதற்கு மேலும் விசேஷித்து அருளிச்செய்த்தும் இங்கு அநுஸந்திக்கத் தக்கது. ‘பிறர்க்கும் எமக்கும் பொதுவான ஸ்வாமியல்லன், எமக்கே அஸாதாரண ஸ்வாமி’ என்கிற விதற்குக் கருத்து யாதெனில், கேண்மின் பரவாஸுதேவனா யிருக்குமிருப்பு நித்யமுக்தர்களின் அநுபவத்திற்காக, வியூஹநிலை பிரமன் முதலானாருடைய கூக்குரல் கேட்கைக்காக. ராமக்ருஷ்ணாதி விபவாவதாரங்கள் அக்காலத்திலிருந்தவர்கட்காயொழிந்தன. அந்தர்யாமியாயிருக்குமிருப்பு ப்ரஹ்லாதாழ்வான் பொல்வார்க்குப் பயனளிக்கும், அர்ச்சாவதார நிலையொன்றே எமக்கு ஜீவநம். ஸம்ஸாரிகளுக்கு முகங்கொடுக்கைக்காவே யன்றோ இது ஏற்பட்டது. குருடர்க்கு ஏற்பட்ட இடத்திலே விழிகண்ணர் புகுரலாமோ? விழிகண்ணர்க்கு ஏற்பட்ட இடம் குருடர்க்கு உதவுமோ? ஆகையாலே எமக்கே அஸாதாரண ஸேவ்யமாக வாய்ந்தது திருக்கோட்டியூர் நிலையென்கிறார். பதியே பரவித்தொழும் தொண்டரனைவரையும் ‘எங்கள்’ என்றதில் கூட்டிக்கொள்க. “அடியோமுக்கே யெம்பெருமானால் லீரோ நீர் இந்தளூரீரே!“ என்றருளிய பாசுரமும் இங்கு ஸ்மரிக்கவுரியது. ‘எங்களெம்மிறை’ என்றதிற்காட்டில் ‘எம்பிரான்’ என்றதற்கு வாசி என்னென்னில், ஸொத்தையுடையவன் என்பதுமாத்திரம் அதனால் சொல்லிற்று, ஸொத்துக்கு ஆவனசெய்யும் உபகாரகத்வம் இதனாற் சொல்லுகிறது. “இவன் நமக்கு உரியவன்“ என்னும்படி சேஷ்த்வத்திலே நிறுத்திவைப்பது மாத்திரமான ஸ்வாமித்வம் முதல்விசேஷணத்தின் பொருள். சேஷத்வத்தின் பயனான கைங்கரியத்தைக் கொள்ளுகையும், கைங்கரியம் செய்யுமிடத்து நேரும் இடையூறுகளை போக்கிப் பணிகொள்ளுகையும் இரண்டாவது விசேஷணத்தின் பொருளாக விவக்ஷிதம். பிரான் - உபகாரஞ் செய்பவன். அவிச்சிந்ந கைங்கரியங்கொள்ள பெறுவதையே உபகாரமாக நினைப்பர் மாஞானிகள். இப்படி எமக்கு ஸ்வாமியாயிருப்பதும் எமக்கு உபகாரகனாயிருப்பதும் வேறு அடியார்கள் அவனுக்கு இல்லாமையாலன்று, நித்யவிபூதியை ஒரு நாடாகவுடையவனா யிருந்து வைத்தும் “மீனுக்குத் தண்ணீர் வார்ப்பதுபோல அவர்கட்குக் காட்சி கொடுத்துக்கொண்டிருக்கும் நிலைமை ஒரு சிறப்போ!“ என்று இங்கே போந்தருளி எங்களெம்மிறை யெம்பிரானா யிருக்கிறானென்னுங் கருத்துப்பட “இமையோர்க்கு நாயகன்“ என்கிறார்.

English Translation

Our own dear Lord and Master is the Lord of gods, forever residing with grace in the hearts of those who worship him. He is the Lord of Tirukkottiyur where clouds rain streams of gold. Lighting up the place and making lotus buds blossom

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்