விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வலம்புரி ஆழியனை*  வரைஆர் திரள்தோளன் தன்னை,* 
    புலம்புரி நூலவனை*  பொழில் வேங்கட வேதியனை,*
    சிலம்புஇயல் ஆறுஉடைய*  திருமாலிருஞ் சோலைநின்ற,*
    நலம்திகழ் நாரணனை*  நணுகும்கொல்?  என்நல்நுதலே!  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வலம்புரி ஆழியனை - சங்கும் சக்கரமுமுடையனும்
வரை ஆர் திரள் தோளன் தன்னை - மலைபோன்று திரண்ட திருத்தோழ்களை யுடையவனும்
புலம்பரி நூலவனை - மநோஹரமான யஜ்ஞோபவீதத்தையுடையவனும்
பொழில் வேங்கடம் - சோலைசூழ்ந்த திருவேங்கட மலையிலுள்ளவனும்
வேதியனை - வேதப்ராதிபாத்யனும்

விளக்க உரை

ஆச்ரிதர்களுக்கு ஆபத்து வந்தவாறே தாமதமின்றி ரக்ஷித்தருள்வதற்காகத் திருவாழி திருச்சங்குகளை எப்போதும் திருக்கைகளில் ஏந்தியுள்ளவனும், அந்தத் திருப்படைகளில்லாமலும் ரக்ஷிக்கவல்ல தோள்மிடுக்கை யுடையவனும், ரக்ஷித்தருளா தொழியினும் விட வொண்ணாதபடி திவ்யமான யஜ்ஞோபவீதமணிந்த அழகு வாய்ந்தவனும், ரக்ஷ்யவர்க்க முள்ளவிடந்தேடித் திருவேங்கடமலையிலே வந்து நிற்பவனும், “அதுதானும் பரத்வத்தோடொக்கும்“ என்று சொல்லவேண்டும்படி மிக நீசரானார்க்கும் முகங்கொடுத்துக்கொண்டு திரு மாலிருஞ்சோலையிலே வந்து நிற்கையாகிற நீர்மையிலேற்றத்தை யுடையவனுமான ஸ்ரீமந்நாராயணனை என் மகள் நண்ணப்பெறுவளோ? சிலம்பியலாறு - “சிலம்பு“ என்கிற சொல்லியிட்டு வ்யவஹரிக்கப் படுகின்ற ஆறு, நூபுரகங்கை யென்று வடமொழிப் பெயர்பெறும். திருமால் உலகமளந்த காலத்தில் மேல் ஸத்யலோகத்திற் சென்ற அப்பெருமானது திருவடியைப் பிரமன் தன் கைக்கமண்டல தீர்த்தத்தாற் கழுவி விளக்க, அக்காற்சிலம்பினின்று தோன்றியதனால் “சிலம்பாறு“ என்று பெயராறயிற்று. நுபுரகங்கை பெயன்ற வடமொழிப்பெயரும் இதுபற்றியதே (நூபுரம் - சிலம்பு, ஒருவகைக் காலணி) “சிலம்பியலாறுடைய“ என்றவிடத்திற்குப் பெரியவாச்சான் பிள்ளையருளிய வியாக்கியானம் - “ஸ்வர்க்கதினின்னும் அப்ஸரஸ்ஸுக்கள் வந்து ஆச்ரயிக்க, அவர்களுடை சிலம்பினுடைய யுடைத்தான் ஆற்றையுடைய திருமாலை என்றுள்ளது.

English Translation

The Lord with mountain-like strong arms wielding a dextral conch, wearing a bright attractive thread on his shoulder. Is the vedic Lord of venkatam. He is the good Narayana residing in Tirumalirusolai with Silambaru, Nupura Gango, flowing through it. Will my bright-forehead girl at least be close to him today? I wonder!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்