விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கரு உடை மேகங்கள் கண்டால்*  உன்னைக் கண்டால் ஒக்கும் கண்கள்* 
    உரு உடையாய்! உலகு ஏழும்*  உண்டாக வந்து பிறந்தாய்!* 
    திரு உடையாள் மணவாளா!*  திருவரங்கத்தே கிடந்தாய்!* 
    மருவி மணம் கமழ்கின்ற*  மல்லிகைப் பூச் சூட்ட வாராய் 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கண்கள் - கண்களானவை
உன்னை கண்டால் - உன்னைப் பார்த்தால்
கரு உடை மேகங்கள் - கர்ப்பத்தையுடைய  (நீர்கொண்ட) மேகங்களை
கண்டால் - பார்த்தால் (அதை)
ஒக்கும் - ஒத்துக் குளிர்கின்ற

விளக்க உரை

நீர் கொண்டெழுந்த காளமேகம் போன்ற வடியையுடையவனே! உலகங்களுக்கு ஸத்தையுண்டாகும்படி இந்நிலத்தில் வந்து பிறந்தவனே!; திருவாகிய ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கும் திருவாயிருப்பவனே! இந்த மல்லிகைப்பூவின் பரிமளம் குன்றுவதற்கு முன்னே இதைச் சூடவா என்பதாம் ‘ஒக்கும்’ என்பதை முற்றாகக் கொண்டு கருவுடை மேகங்களைக் கண்டால் உன்னைக் காண்பதை ஒத்திருக்கும்: (அதுக்குமேலே) கண்கள் உருவுடையதாய் - கண்ணழகையுமுடையவனே! என்றும் உரைக்கலாம்.

English Translation

O beautiful One! When my eyes see you, they rejoice like they have seen the dark laden clouds. You took birth to redeem the seven worlds. O Bridegroom of the goddess of wealth, Lord reclining in Srirangam! Come, wear these Jasmine flowers of lasting fragrance.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்