விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    புந்திஇல் சமணர் புத்தர் என்றுஇவர்கள்*  ஒத்தன பேசவும் உவந்திட்டு,* 
    எந்தை பெம்மானார் இமையவர் தலைவர்*  எண்ணிமுன் இடம்கொண்ட கோயில்,*
    சந்தனப் பொழிலின் தாழ்சினை நீழல்*  தாழ்வரை மகளிர்கள் நாளும்,*
    மந்திரத்து இறைஞ்சும் மாலிருஞ் சோலை*  வணங்குதும் வா! மட நெஞ்சே! 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

புந்தி இல் - விவேகமற்ற
சமணர் - சமணரென்றும்
புத்தர் என்ற இவர்கள் - பௌத்தர் என்றும் சொல்லப்படுகிற வேதபாஹ்யர்கள்
ஒத்தன - தங்களுடைய துர்ப்புத்திக்கு ஒத்த பொருள்களை
பேசவும் - சொல்லச் செய்தேயும்

விளக்க உரை

‘வேதம் அப்ரமாணம்’ என்று சொல்லுகின்ற அவிவேகிகளான சமணர் பௌத்தர் முதலிய புறமதத்தவர்கள் தங்களுடைய கொள்கைக்குத் தக்கவாறு மனம்போனபடியெல்லாம் பிசகாகப் பிதற்றாநிற்க, ‘அந்தோ! இப்பாவிகள் நம்மை இழந்து நித்ய ஸம்ஸாரிகளாய்த் தடுமாறுகின்றனரே!’ என்கிற பரிதாபம் திருவுள்ளத்தில் ஒருபுறமிருந்தாலும் “இப்பாவிகளுக்கு நாம் வேண்டாவாகிலும் நம்மையே உகந்திருக்கும் அன்பர்கட்கு நாம் உதவப்பெற்றோமிறே!“ என்றுகொண்டு திருவுள்ளமுவந்திருக்கின்றவரும் எங்கள் குலத்துக்கு நாதரும் அயர்வறும்மரர்களதிபதியுமான பெருமான் நித்யஸூரிகளுக்கும் ஸம்ஸாரிகளுக்குமொக்க முகங்கொடுக்கலாம் தேசம் இதுவென்று திருவுள்ளம் பற்றி நித்ய ஸந்நிதிபண்ணி யிருக்குமிடமான திருமாலிருஞ் சோலையைத் தொழுது மெழு நெஞ்சமே! என்கிறார்.

English Translation

O Frail heart! The Lord of celestials, our futelary deity, is pleased even with the senseless monodism that the Sramanas and Bauddhas prate. Long ago he decided to reside in the temple of Malirumsolai amid Sandalwood groves, where maidens of the hill tribes go into cover under low canopies and chant every day. Come let us offer worship there

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்