விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    புதம்மிகு விசும்பில் புணரி சென்று அணவ*  பொருகடல் அரவணைத் துயின்று,* 
    பதம்மிகு பரியின் மிகுசினம் தவிர்த்த*  பனிமுகில் வண்ணர்தம் கோயில்,*
    கதம்மிகு சினத்த கடதடக் களிற்றின்*  கவுள்வழி களிவண்டு பருக,* 
    மதம்மிகு சாரல் மாலிருஞ் சோலை*  வணங்குதும் வா! மட நெஞ்சே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

களிற்றின் - யானையினுடைய
கவுள் வழி - கபோலத்தின் வழியே (பெருகாநின்ற)
களி - மதஜலத்தை
வண்டு - வண்டுகள்
பருக - பானம் பண்ணாநிற்கச் செய்தேயும்

விளக்க உரை

புதமிகுவிசும்பு -“அம்புதம்“ என்னும் வடசொல் மேகமென்னும் பொருளது, அச்சொல்லே இங்கு முதற்குறையாகப் புதம் என வந்துள்ளது. “கபோலம்“ என்னும் வடசொல் “கவுள்“ எனச் சிதைந்து கிடக்கிறது. (களிவண்டு பருக மதமிகுசாரல்) கடலில் ஒரு மூலையிலே கொசு இருந்து நீரைப் பருகினாலும் கடல் வற்றாதாப் போலே எத்தனை வண்டுகள் பானம் பண்ணினாலும் மதநீர் வற்றாதே பாய்ந்து வெள்ளமிடு மென்ப.

English Translation

O Frail Heart! The Lord reclines in the deep ocean where waves touch the clouds in the sky. He then came as krishna and ripped the jaws of the impetuous white horse kesin. He resides in Malirumsolai amid groves overflowing with the sweet ichor of rutted elephants that bees hover over and drink from their running cheeks. Come, let us offer worship there

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்